கொரோனா விதிகளை மீறியதாக கமலிடம் விளக்கம் கேட்க சுகாதாரத் துறை முடிவு
சென்னை: கொரோனா விதிமுறைகளை மீறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டதற்காக அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 100 நாட்களில் 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்துள்ள நிலையில் கமல்ஹாசனுக்கு கடந்த நவம்பர் 23 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கமல் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து பிக்பாஸ் அரங்கில் தோன்றிய கமல், கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இரண்டு தவணை தடுப்பூசி
மேலும் தான் இரண்டு தவணை தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதால்தான் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதையும் கமல் தெரிவித்தார். இதையேதான் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் சுட்டிக் காட்டி அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு தெரிவித்தார்.

கொரோனா நெகட்டிவ்
இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி கமல்ஹாசனுக்கு கொரோனா நெகட்டிவானது. இதையடுத்து அவர் 3ஆம் தேதி ஓய்வுக்கு பின்னர் அடுத்த நாள் 4ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வீட்டுக்கு செல்லாமல் நேராக பிக்பாஸ் செட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள்
இந்த நிலையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பொது மக்கள் முன் மேடையில் பேசினார். பின்னர் எலிமினேட் ஆனவருடன் பேசியுள்ளார். கொரோனா நெகட்டிவ் என வந்தாலும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய விதிமுறையை கமல் மீறிவிட்டாரா என சுகாதாரத் துறை செயலாளரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
Recommended Video

தனிமை
அப்போது ஜெ ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூறுகையில் நடிகர் கமல்ஹாசன் கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்த நபர் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் அதை மீறி நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications