நகரசபையா? திமுக கட்சிக்கூட்டமா?.. விதிகளை எல்லாம் காத்துல பறக்க விட்டுட்டீங்களே.. விமர்சித்த மநீம!
சென்னை : நகரசபை கூட்டங்கள் முறையாக நடத்தப்படாமல், திமுகவின் கட்சிக் கூட்டங்களைப் போலவே நடத்தப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் குற்றம்சாட்டியுள்ளது.
கிராம சபைக் கூட்டங்கள் போல தமிழ்நாட்டில் முதல்முறையாக நகரசபை கூட்டங்கள் கடந்த நவம்பர் 1ஆம் தேதி நடத்தப்பட்டன. இந்தக் கூட்டங்களில் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்குபெற்றனர்.
இந்நிலையில், வார்டு கவுன்சிலர் தலைமையேற்று நடத்த வேண்டும் என்ற விதிமுறைகள் இந்த நகரசபை கூட்டத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் சாடியுள்ளது.
அடுத்தடுத்த கூட்டங்களில் விதிமுறைகளின்படி இந்த நகர சபை கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

நகரசபை
கிராம சபைக் கூட்டங்கள் வாயிலாக பல்வேறு மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. கிராம சபை போல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தவும், மக்களின் குறைகளைக் கேட்டறியவும் நகர சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்புவை கடந்த பிப்ரவரி மாதம் நேரில் சந்தித்து, நகரசபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று மனு அளித்தார். அதைத் தொடர்ந்து நகரசபை கூட்டங்களை நடத்துவது பற்றி ஆலோசித்து வந்தது தமிழக அரசு.

நவம்பர் 1 - நகரசபை
இதையடுத்து, கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவதைப் போன்று தமிழ்நாட்டில் முதன்முறையாக நகர சபை மற்றும் மாநகர சபைக் கூட்டங்கள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட்ட நாளில் தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளில் இந்த கூட்டங்களை நடத்தியது தமிழக அரசு. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் பகுதியில் 6வது வார்டு நகரசபை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் கே.என்.நேரு அந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்.

மக்கள் நீதி மய்யம் கண்டனம்
இந்நிலையில், கட்சிக் கூட்டங்கள் போல் நகரசபை கூட்டங்கள் நடந்ததாக மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நகரசபைக் கூட்டங்கள் அரசு நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தி, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும். ஆனால் நடந்தது என்ன? தலைநகரான சென்னையில் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. கூட்டங்கள் நடத்தப்பட்ட பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க-வின் கட்சிக்கூட்டங்கள் போலவே நடத்தப்பட்டது.

நாடகசபையா
தாம்பரம் மாநகராட்சியில் அமைச்சர் நேரு, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு முன்னிலையில் பள்ளி மாணவரால் தி.மு.க தலைவரின் கவிதை வாசிக்கப்பட்டு அனைவரும் அதை ரசித்துக் கேட்டு மகிழ்ந்தனர்! இது நகரசபையா, இல்லை தி.மு.கவின் நாடகசபையா? வார்டு கவுன்சிலர் தலைமையேற்று நடத்தவேண்டும் என்ற விதிமுறை அப்பட்டமாக காற்றில் பறக்கவிடப்பட்டது.

இருந்தாலும் பாராட்டு
அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் தலைமையில் "குறைதீர் கூட்டங்கள்" போலவே இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நிதிநிலை அறிக்கை பெரும்பாலான இடங்களில் வாசிக்கப்படவில்லை. தீர்மானங்கள் முறையாக இயற்றப்படவில்லை என்பது போன்ற பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும், 12 ஆண்டுகளுக்குப் பிறகு நகரங்களில் இதுபோன்ற மக்கள் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெறத் தொடங்கி இருப்பது பாராட்டுக்கும், வரவேற்புக்கும் உரியதே.

கமல் குரல் ஒலிக்கும்
அடுத்தடுத்த கூட்டங்களில் விதிமுறைகளின்படி இந்த நகர சபை கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. மக்களை அதிகாரப்படுத்தும் கிராம சபை, நகர சபை போன்ற எல்லா வழிமுறைகளுக்கும் ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications