சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"யார் கிட்ட வெள்ளை அறிக்கை கேக்கறீங்க.. அவங்கதான் என்கிட்ட கேள்வி கேட்கணும்".. கடலூரில் பொங்கிய கமல்

கடலூரில் கமல் பிரச்சாரம் மேற்கொண்டார்

Google Oneindia Tamil News

சென்னை: "திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி தேர்தல் தேர்தல் களத்தில் எனது பணியினை சுலபமாக்கி விட்டனர்.. அதிமுக-வும், திமுகவும் மாறி மாறி தெரிவிக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை மக்கள் நீதி மய்யம் கட்சி திரட்டும்.. இனிமேல் நாம் ஊழல்வாதிகளை பதவியில் உட்கார விடக்கூடாது" என்று கமல் கடலூர் பிரச்சாரத்தின்போது தெரிவித்துள்ளார்.

கமலின் பிரச்சாரம் வேகமெடுத்து வருகிறது.. செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் திரண்டு வருவதையும் பார்க்க முடிகிறது.

 Kamalhasan compaign in Cuddalore District

கூட்டங்களில் கமல் பேசி வருவது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.. குறிப்பாக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம் வழங்கப்படும்.

நாங்கள் யாரையும் ஒடுக்குவதற்காக வரவில்லை, தவறுகளை திருத்துவதற்காக வருகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாக்கடை, சாலை என அடிப்படை வசதிகள் தரமாக இருக்கும். அதனை பரிசோதனை செய்திட நானே சாலைகளில் அங்கப்பிரதட்சணம் செய்வேன் என்று கமல் பேசிய பேச்சுக்கள் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது, விழுப்புரம் மாவட்டத்தில் 2-ம் கட்ட பிரச்சார பயணத்தில் கமல்ஹாசன் ஈடுபட்டார்... அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அனைவரையும் ஏழு அம்ச திட்டங்களில் படிப்படியாக கொண்டுவருவோம்.. 2 வருஷத்துக்கு முன்பே எங்கள் திட்டங்கள் தயாராகிவிட்டன.. ஆனால், அதனை வெளியே சொன்னால், மற்றவர்கள் அதை பார்த்து காப்பி அடிக்ககூடும் என்பதால் இத்தனை நாட்களாக வெளியிடாமல் இருந்தோம்.

கமல் சார், நீங்க பாஜகவின் கமல் சார், நீங்க பாஜகவின் "B டீமா".. அசராத நாயகன்.. டாப்கியர் போட்டு வரும் மய்யம்.. மிரளும் கட்சிகள்

இனி வாரந்தோறும் ஏழு அம்ச திட்ட அறிவிப்புகள் வெளியாகும்.. வெள்ளைக்காரர்கள் போய் தற்போது கொள்ளைக்காரரர்கள் வந்துவிட்டனர்.. நல்லாட்சி மலர மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றார். இதையடுத்த, கடலூர் மாவட்டத்துக்கு சென்ற கமல், அங்கு ஒரு தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள், ஆட்டோ டிரைவர்கள், வேன் டிரைவர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுடன் கலந்துரையாடினார்.

இதன் பின்னர் மறுபடியும் செய்தியாளர்களிடம் பேசியபோது, "என்னை யாராலும் பின்னிருந்து இயக்க முடியாது.. வருமானவரி செலுத்தியது தொடர்பாக என்கிட்ட வெள்ளை அறிக்கை கேட்கின்றனர்.. அது தொடர்பாக வருமான வரித்துறைதான் என்னிடம் கேட்க வேண்டும்..

திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி தேர்தல் தேர்தல் களத்தில் எனது பணியினை சுலபமாக்கி விட்டனர்.. அதிமுக-வும், திமுகவும் மாறி மாறி தெரிவிக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை மக்கள் நீதி மய்யம் கட்சி திரட்டும்.. இனிமேல் நாம் ஊழல்வாதிகளை பதவியில் உட்கார விடக்கூடாது" என்றார்.

English summary
Kamalhasan compaign in Cuddalore District
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X