இதெல்லாம் நிறுத்தணும்.. சந்தி சிரிக்குது.. அறிக்கை போரில் ஆர்வம் காட்டினால் போதுமா.. கமல் காட்டம்
சென்னையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: உள்துறையை கையில் வெச்சிருக்காரே முதல்வர்.. அறிக்கை போரில் காட்டும் ஆர்வத்தை மக்களை காப்பதில் காட்ட வேண்டும்.. சந்தி சிரிக்கிறது" என்று கமல் கொந்தளித்து கேள்வி கேட்டுள்ளார்... சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், கமல் இவ்வாறு முதல்வருக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
நேற்றிரவு சென்னை சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா, அம்மா, மகன் என 3 பேரையும் மர்மநபர்கள் வீட்டுக்குள் நுழைந்து சுட்டுக் கொன்றுள்ளனர்.. அவர்கள் 3 பேருக்குமே நெற்றியில் குண்டு துளைத்துள்ளது.. யார் கொன்றது என்று தெரியவில்லை.

சொத்துக்காக நடந்த கொலையாக இருக்கலாம் என்கிறார் போலீசார்.. டிவி சத்தத்தை அதிகமாக வைத்துவிட்டு, துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.. இது பற்றின விசாரணை நடந்து வருகிறது.. வழக்கமாக வடமாநிலங்களில்தான் இப்படியெல்லாம் துப்பாக்கியால் சுட்டு படுகொலைகள் சர்வ சாதாரணமாக நடைபெறும்... ஆனால் இன்று நம் சென்னையிலேயே நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கொடூர செயலுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.. இதுசம்பந்தமாக 2 ட்வீட்களையும் பதிவிட்டுள்ளார்.. அதில், "தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் அறிக்கைப் போரில் காட்டும் ஆர்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும். பழி போடும் அரசியலை நிறுத்தி விட்டு ஆயுதக் கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். கமலின் இந்த அதிரடி கோப ட்வீட்கள் மாநில அரசுக்கு கடுப்பை தந்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications