கமல் சொன்ன "அந்த" வார்த்தை.. மிரண்டு போன திமுக.. உறைந்து போன அதிமுக.. என்ன நடக்கிறது மய்யத்தில்..?!
திமுக, அதிமுகவை கமல்ஹாசன் சாடியிருந்தார்
சென்னை: நேற்று கமல் பேசிய பேச்சின் தாக்கம் தமிழக அரசியல் களத்தில் அனல் வீசி கொண்டிருக்கிறது.. இனி கமல்ஹாசன் எடுத்து வைக்கும் அடி ஒவ்வொன்றும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தக்கூடும் என்று நம்பப்படுகிறது.
சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.. கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காலையில் 11 மணிக்கே டார்ச் லைட்டை கையில் பிடித்துக் கொண்டு மேடைக்கு வந்தது முதல் நிகழ்ச்சி முடியும் வரை கூட்டம் பரபரப்புடனேயே நடந்து முடிந்துள்ளது.
அப்போது கமல், இந்த கூட்டத்தில் பேசியதாக சில விஷயங்கள் கசிந்துள்ளன.. அதில், இந்த திமுகவையும், அதிமுகவையும் கடுமையாக சாடியிருக்கிறார்.. அதிலும் ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு பேசியதுதான் முக்கிய ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது..

அதிமுக
"கட்சிக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று நம்மை கேட்கிறார்கள்... நாம் முறையாக மக்களிடம் வாங்கி அதை ஒழுங்கான கணக்கோடு பராமரித்து வருகிறோம்... ஆனால் நம்மை கேள்வி கேட்பவர்கள் எப்படி அரசியலுக்கு வந்தார்கள்? அரசியலுக்கு வரும்போது எப்படி இருந்தாங்க? இன்னைக்கு எவ்வளவு சொத்துக்களோடு இருக்கிறார்கள்?

அக்காக்கள்
ஜெயலலிதா, சசிகலா என்று அன்னைக்கு 2 அக்காக்கள் இருந்தனர்... அவங்கள் பின்னாடி அம்மா என்று அழைக்கப்பட்டனர்.. ஊழல் செய்துவிட்டு ஜெயிலுக்கு போன சசிகலாவை ஏதோ தியாகியை போல வரவேற்கிறார்கள்.. சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவில் ஏதாவது நடக்குமா என்று ஸ்டாலின் காத்திருக்கிறார்... இந்த அபூர்வ சகோதர்கள் ஓபிஎஸ், இபிஎஸ்ஸின் நடவடிக்கைகளால் அதிமுக கூடிய சீக்கிரம் ரெண்டாக உடையும்.. அதற்காக நாம் காத்திராமல் நம்ம வேலைகளை தொடர்ந்து பார்ப்போம்" என்றார்.

ஸ்டாலின்
சில மாசத்துக்கு முன்னாடி, பாண்டிச்சேரியில் ஒரு பிரஸ் மீட்டில் நடந்தது. மக்கள் நீதி மய்யம் பற்றிய கேள்வியை ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.. அதற்கு ஸ்டாலின், "நான் அரசியல் பத்தி பேசிக்கிட்டிருக்கேன்" என்றார். அதாவது மநீம எல்லாம் ஒரு கட்சியா என்ற ரீதியில் கிண்டலாக பதில் சொல்லி இருந்தார்.. இதைதான் நேற்று கமலும் நினைவுபடுத்தி பேசியிருக்கிறார்.

திமுக
"நாமெல்லாம் ஒரு கட்சியா என்ற மாதிரி அன்னைக்கு ஸ்டாலின் பதில் சொன்னாரே.. அதை மன்னிச்சிடலாம்.. ஆனால் மறக்க முடியாது.. என் பெயரையே அன்னைக்கு எல்லாரும் சொல்றதுக்கு தயங்கினாங்களே? ஆனால், இன்னைக்கு நம்மையும் ஒரு கட்சியாக பேசும் அளவுக்கு நம் வளர்ச்சி இருக்கிறது" என்றார்.

கூட்டணி?
கமல் பேசியதை பார்த்தால், திமுகவுடன் கூட்டணி இருக்காது என்றே கருதப்படுகிறது.. மய்யத்தின் வாக்குகளை கமல் பிரிப்பார் என்பதால்தான், திமுக அவருடன் கூட்டணி சேர முயற்சி நடக்கிறது என்று சொல்லப்பட்டது.. சில தினங்களுக்கு முன்புகூட ஸ்டாலின் ஒரு டிவிக்கு தந்த பேட்டியில் இதை சொல்லி இருந்தார்.. இந்நிலையில் கமல், ஸ்டாலினை பற்றி வெளிப்படையாகவே விமர்சித்திருக்கிறார். அப்படியானால் மய்யம் யாருடனும் கூட்டணி வைக்காதே என்றே தெரிகிறது.

வாரிசு அரசியல்
இதை பற்றியும் நேற்று கமல் பேசும்போது, "இதோ இந்த கூட்டத்திற்கு என் மகள் அட்சரா வர்றேன்னு சொன்னாங்க.. நான்தான், வாரிசு அரசியலுக்கு மய்யத்தில் இடமில்லை, வேணும்னா, இந்த கூட்டத்தை டிவியில் பார்த்துக்கோன்னு சொல்லிட்டேன்.. பெரிய கட்சிகள் என்று திமுக, அதிமுகவை சொல்லிட்டு வந்தார்கள்.. ஆனால், இப்போ மக்கள் வேறுவிதமா பேசிக்கிறாங்க.

அதிர்ச்சி
நாம் திமுக, அதிமுகவோடு சேர வேண்டாம்... நாம் நேர்மையான அணி... அருமை நண்பர் கெஜ்ரிவால் ஆட்சியை பிடிக்கலையா? அதுமாதிரி நாமும் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம். அதனால் மக்கள் கிட்ட சேருவோம்.. திமுக, அதிமுகவை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்.. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஊழல் அரசியல் செய்யும் கட்சிகள்... ஊழல் அரசியல் செய்யும் கட்சிகளுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது....அவர்களுடன் ஒரு போதும் நாம் சேர மாட்டோம்" என்று சற்று காரமாகவே பேசியிருக்கிறார் கமல்!!












Click it and Unblock the Notifications