உப்பு போட்டு சாப்பிடறவர்.. தேர்ந்தெடுக்கப்படாமலேயே தலைவர்.. ஆஹா... யாரை சொல்கிறார் கமல்!
பிக்பாஸ் புரொமோவில் கமலின் பேச்சு வைரலாகி வருகிறது
சென்னை: "உப்பு போட்டு சாப்பிடவன் உள்ளே இருக்க மாட்டான்னு சொல்லிட்டு உள்ளேயே இருக்காரு ஒருத்தரு.. தேர்ந்தெடுக்கப்படாமலேயே தலைவராகிட்டு எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறவர் இனனொருத்தர்" என்று மநீம தலைவர் கமல்ஹாசன் பேசிய பிக்பாஸ் புரோமோ பேச்சு வைரலாகி வருகிறது.
அதிமுக, திமுக இல்லாமல் மாற்று என்றால், கமல் ஒருவேளை 3வது அணியை உருவாக்குவாரா? கமல் தலைமையில் அந்த 3வது அணி இருக்குமோ? கம்யூனிஸ்ட், விசிக, ரஜினி என எல்லோருமே கமலின் தலைமையில் அணி திரள்வார்களா? என்ற பேச்சு அரசியல் களத்தை அசைத்து வருகிறது.
இதற்கு காரணம், திமுக, அதிமுக கூட்டணியில் உள்ளவர்கள் சற்று குழம்பியே போயுள்ளனர்.. கெஞ்சியும் மிஞ்சியும் 60 சீட்டுக்கு அதிமுகவுக்கு அடிபோட்டு வருகிறது பாஜக.. ஆனால், அந்த கட்சியில் உள்ள அமைச்சர் தனித்து போட்டி என்று சொல்லி வருகிறார்.

அதிமுக
இன்னொரு பக்கம், திமுகவில் உள்ள விசிகவும், மதிமுகவும் தனிச்சின்னத்தில்தான் போட்டியிட போவதாக சொல்லி வருகிறார்கள்.. அதனால், கமலை வைத்து அடுத்தக்கட்ட நகர்வு இருக்குமோ என்ற ரீதியிலும் அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது.

கமல்
ஆனால், கமல் என்ன நினைக்கிறார் என்று இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை.. அதேசமயம், தன்னுடைய ஆதங்கம், உள்ளார்ந்த கருத்துக்களை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பொடி வைத்து பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.. அப்படித்தான் பேசியும் வருகிறார். ஒரு டிவி ஷோ-வை தன்னுடைய அரசியல் பிரச்சாரத்துக்கு இப்படித்தான் உபயோகத்துப்படுத்துவதா? என்ற எதிர்தரப்பு விமர்சனங்கள் எழுந்தாலும் எழ ஆரம்பித்தன.. இருந்தாலும், வழக்கத்தை மாற்றி கொள்ளவில்லை.

புரோமோ
அது இன்று வெளியாகி உள்ள பிக்பாஸ் புரமோவிலும் தெளிவாகி உள்ளது.. இந்த நிகழ்ச்சி ஒருவாரமாக நடந்து வருகிறது.. கடந்த வாரம் துவக்கி வைத்துவிட்டு போன கமல், மறுபடியும் இன்றுதான் இந்த வீட்டுக்கு வர போகிறார். அந்த புரமோவில் கமல் பேசுவதாவது, "உப்பு போட்டு சாப்பிடவன் உள்ளே இருக்க மாட்டான்னு சொல்லிட்டு உள்ளேயே இருக்காரு ஒருத்தரு.. தேர்ந்தெடுக்கப்படாமலேயே தலைவராகிட்டு எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறவர் இனனொருத்தர். நாம எப்படி? வேடிக்கை பார்த்துட்டே இருக்க போறோமா? ஏதாவது செய்ய வேணாம்?" என்று கேள்வி எழுப்புகிறார். அப்போது, "இவன் யாரென்னு தெரிகிறதா" என்ற பாட்டு ஒலிக்கிறது.

அரசியல்
கமல் யாரை சொல்கிறார் என்று வெளிப்படையாக தெரியாவிட்டாலும், அரசியல் உள்குத்து நிறைந்த இந்த புரோமோ அதிமுக தரப்பை அதிர வைத்துள்ளது.. காரணம், கடந்த வாரம் முழுவதுமே அதிமுக கூடாரம் வெலவெலத்து காணப்பட்டது.. மக்கள் எல்லாரும் பார்க்கிறார்களே.. பகிரங்கமாக இப்படி மோதிக் கொண்டால், திமுகவுக்கு சாதகமாகிவிடுமே என்றெல்லாம் யோசிக்காமல் கருத்து மோதலில் ஈடுபட்டதும், அதனை தொடர்ந்து பேச்சுவார்த்தைகளும் சலசலப்பை உண்டாக்கியது.

சுரேஷ் சக்ரவர்த்தி
அதேசமயம். கமல் யாரைச் சொல்கிறார் என்றால் அது சுரேஷ் சக்கரவர்த்தி (இவர்தான் உப்பு மேட்டரைப் பேசியவர்) மற்றும் ரம்யா பாண்டியன் (இவர்தான் கேப்டன்.. அதாவது தலைவர்) என்று சொல்லப்படுகிறது. அதைத்தான் இப்படிப் பூடகமாக பேசி விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளார் கில்லாடி கமல் என்று சொல்கிறார்கள் பிக் பாஸை தொடர்ந்து பார்ப்பவர்கள்.
எது எப்டியோ... கமல் புரோமோவில் பேசிய பேச்சினை ட்விட்டர்வாசிகள் பலரும் வரவேற்று ட்வீட் போட்டு வரவேற்று வருகின்றனர்!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications