"கோவிலில் உள்ள.. சாமி சிலைகள் கூட தான் டிரஸ் போடாம இருக்கு".. கமல்ஹாசன் பேச்சால் திடீர் சர்ச்சை!
கமல்ஹாசன் பொள்ளாச்சியில் உரை நிகழ்த்தினார்
சென்னை: "சாமிகூடதான் கம்மியா டிரஸ் போட்டிருக்கு.. சில சாமி டிரஸ்ஸே போடறது இல்லை.. அங்கே தோணாதது என் அக்காவையும், என் தங்கச்சியையும் பார்க்கும்போது ஒருவனுக்கு ஏன் தோணுது? அதாவது வேலை செய்யாமல் சம்பளம் மாதிரி காதல் இல்லாமல் அவனுக்கு அது தேவைப்படுது... அதனால்தான் பலாத்காரம் அதிகரிக்கிறது" என்று கமல்ஹாசன் பேசியுள்ளார்.
மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், அக்கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.. அதில் அவர் பேசும்போது, தன்னுடைய கட்சியில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்தும், பெண்களின் வலிமை குறித்தும் பேசினார்..
அதில் கமல் குறிப்பிட்டு பேசிய ஓரிரு வரிகள்தான் இவை: "பெண்கள் மத்தியில் பேச எனக்கு எப்பவுமே கூச்சம் இருக்காது.. ஏன் என்றால் என் வீட்டில் பெண்களின் எண்ணிக்கை அதிகம்.

பெண்கள்
நான் வளரும் காலத்தில், வெவ்வெறு இடங்களில் வேலைக்கு சென்றாலும், என் அண்ணன் மகள் 3 பேரும் என்னுடன்தான் சேர்ந்து வேலை செய்தார்கள். அம்மா, என் அக்கா, என் அம்மா, உதவிக்கு இருக்கும் அம்புஜம் அம்மணி என எல்லாருமே எங்கள் வீட்டில் பெண்கள்தான் அதிகம். என் வீட்டுக்கு அண்ணன்கள், அப்பா இருந்தால் மட்டும் எங்கள் விழுக்காடு கூடும். மத்தபடி எங்கள் வீடு மதுரைதான்.

காந்தி
உலகை மாற்றியமைத்த புரட்சிகளில் பெண்களின் பங்கு அதிகம் என்பதை சொல்லியே ஆக வேண்டும்.. இந்திய சுந்திர போராட்டத்தை, மகாத்மா காந்திக்கு முன்னோடிகளாக அதை துவங்கி முன்னால் நின்ற பெண்கள் பலர்.. காந்தியின் கைத்தடிக்கு பலம் சேர்த்தவர்களும் அதே பெண்கள்தான்.

பலாத்காரம்
இன்று பெண்கள் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனைக்கு காரணம்? இன்று நடக்கும் பாலியல் பலாத்காரங்களுக்கு என்ன காரணம்? பெண்கள் அரைகுறை துணி அணிவதால், ஆண்கள் மனம் கெட்டுவிடுவதாக சொல்கிறார்கள்.. எங்கே எதை செய்யணும்னு தெரிஞ்சும் அதை ஆண்கள் மீறுகிறார்கள்.. அதனால்தான் அது வன்முறையாகிறது.

தங்கச்சி
சாமிகூடதான் கம்மியா டிரஸ் போட்டிருக்கு.. சில சாமி டிரஸ்ஸே போடறது இல்லை.. அங்கே தோணாதது என் அக்காவையும், என் தங்கச்சியையும் பார்க்கும்போது ஏன் தோணுது? அதாவது வேலை செய்யாமல் சம்பளம் மாதிரி காதல் இல்லாமல் அவனுக்கு அது தேவைப்படுது.. காதல் என்று ஒன்று இருந்துவிட்டால், அது ரெண்டு பேருக்கும் பொதுவானதாகிவிடும்.. அப்படித்தான் இருக்க வேண்டும்.. அது மிருகத்துக்குகூட தெரியும்.. ஆனால் அவனுக்கு தெரியல.

மக்கள் நீதி மய்யம்
ஆண்களைவிட பெண்கள் வாக்காளர்கள் அதிகம். தமிழ்நாட்டில் பெண் வாக்காளர்கள் நினைத்தாலே ஆட்சியை மாற்றிவிடலாம்.. நம் கட்சியில் உள்ள பெண்கள் இதற்காக போராட வேண்டும். ஏன் என்றால் தலைமையில் இருந்து உங்களுக்கு முழு சப்போர்ட் கிடைக்கும்.. அரசியல் என்றாலே குவார்ட்டர், பிரியாணி, கரைவேட்டி, டாட்டா சுமோ, ஆபாச பேச்சு என்றுதான் ஒரு எண்ணம் உள்ளது.. அது உண்மை இல்லை என்று சொன்னது தமிழகத்தின் மக்கள் நீதி மய்யம்தான் என்பதை உரக்க சொல்லலாம்" என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications