வசமாக சிக்கிய கமல்.. டக்கென சுதாரித்து.. சூப்பராக சமாளித்து காட்டிய சாமர்த்தியம்.. செம..!
நேற்று கமல் பேசிய டயலாக்குகள் அனைவரையும் கவர்ந்தது
சென்னை: நேற்றும் வழக்கம்போல, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலக்கிவிட்டார் கமல்.. ஆனால் வித்தியாசமான யுக்தியால் ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது சில நாட்களாகவே பிக்பாஸ் சீசன் விறுவிறுப்பு கூடி வருகிறது.. இப்போதைக்கு இந்த நிகழ்சசியில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.
இருக்கும் போட்டியாளர்கள் விளையாட்டுகளை திறன்பட விளையாடி வருகிறார்கள்.. சென்ற வாரம் கமல் பிறந்த விழா என்றால், ஒரு பரபரப்பும், சுவாரஸ்யமும் இல்லாமல் அந்த சனிக்கிழமை முடிந்துவிட்டது.. இந்த முறையும் தீபாவளியை முன்னிட்டு, கன்டன்ட் இல்லாமல் நிகழ்ச்சி முடிந்தது.. ஆனால், சுவாரஸ்யம் நிறைந்திருந்தது.

டாஸ்க்
போட்டியாளர்களும் சரி, கமலும் சரி.. இரு தரப்புமே அமர்க்களமாக நேற்று டாஸ்க்குகளை செய்து கலக்கினர்.. போட்டியாளர்களின் சில டாஸ்க் மிக நீளமான இருந்ததாலோ என்னவோ, வரும்போதே கமல் நாற்காலியுடன் வந்தார்.. நிகழ்ச்சி முடியும்வரை அந்த நாற்காலியை போட்டு உட்கார்ந்திருந்தார்.

பாட்டு
இதற்கு பிறகுதான் கமலின் டர்ன் துவங்கியது.. போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்த டயலாக்குகளை கமலிடம் உரிமையாக கேட்டு பேச சொன்னார்கள்.. சிலர் பாட்டு பாட சொன்னார்கள்.. ஆனால் ஒவ்வொரு போட்டியாளரும் கமலிடம் கேட்ட அத்தனை விருப்பங்களும், தமிழக மக்களுக்கும் என்றுமே பிடித்தவைகள்தான்.. அதனால்தான் கமல் அவைகளை நேற்று செய்துகாட்டியபோது, பிரமிக்கவைத்தது. சட்டுசட்டென குரலை மாற்றி பேசுவது கஷ்டம் என்றாலும், அது கமலிடம் எடுபட வாய்ப்பில்லை.

அன்பே சிவம்
உடனுக்குடனேயே தசாவதாரம் பாட்டியாக, அன்பேசிவம் சிவனாக, பலராம் நாயுடுவாக, விருமாண்டியாக நிமிடத்துக்கு நிமிடம் அவதாரம் எடுத்து கொண்டிருந்தார்.அப்போது ஒருசிலர் பழைய படங்களின் வசனங்களை பேச சொன்னார்கள். உதாரணத்தக்கு வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இன்டர்வியூ சீன், மற்றும் சதிலீலாவதி படத்தில் கோவை சரளாவுடன் பேசும் சீன் என சிலவற்றை குறிப்பிட்டு கேட்டனர்.

மாற்று
ஆனால், கமலுக்கு அவை டக்கென ஞாபகம் வரவில்லை.. மறந்து போயிருந்தார் போலும்.. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அதேசமயம் அந்த டயலாக்கை பேசவும் மறுக்காமல், அதற்கு மாற்றாக இன்னொரு டயலாக்கை பேசி சூப்பராக சமாளித்தார்.. வறுமை நிறம் சிவப்பு படத்தின் டயலாக்குக்கு பதிலாக, தெலுங்கு கவிஞர் ஸ்ரீஸ்ரீயின் கவிதை வரிகளை சொல்லி சிலிர்க்க வைத்துவிட்டார்.. அதுதான் கமல்!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications