காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார்.. கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா? திருச்சி சிவா பரபர பேச்சு
சென்னை: காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் அலர்ஜி வந்துவிடும் என்றும், அதற்காக அவர் தங்குகிற விடுதிகளில் எல்லாம் ஏசி வசதி செய்ய கலைஞர் கருணாநிதி உத்தரவு கொடுத்ததாகவும் திருச்சி சிவா எம்பி கூறியுள்ளார். மேலும் காமராஜர் சாகும் தருவாயில், கலைஞரிடம் நீங்க தான் நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறியதாகவும் திருச்சி சிவா கூறியுள்ளார்.
திமுக எம்பி திருச்சி சிவா நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:- கலைஞர் கருணாநிதி என்னை காரில் அழைத்து செல்வார். எனது 23, 24 வயதில் என்னிடம் அவர் கூறுவார். சில பேர் இதை நினைப்பாங்க, என்ன சின்ன பையனிடம் போய் சொல்கிறார் என்று.. ஆனால் அவருக்கு தெரியும்.. இதை போய் நான் கூட்டத்தில் பேசுவேன் என்று.. மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பேன் என்று தெரியும். அதனால் என்னிடம் நிறைய பேசுவார்.

அப்போது ஒரு நாள் காமராஜர் வந்து தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுக்க கண்டன கூட்டம் போடுறார். காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் அலர்ஜி வந்துவிடும். அதற்காக நான், அவர் தங்குகிற விடுதிகளில் எல்லாம் ஏசி வசதி செய்ய உத்தரவு கொடுத்தேன். ஆனால் என்னை எதிர்த்து தான் கூட்டம் போடுகிறார் என்று சொன்னார்.
இதேபோல், காமராஜரை அவசர காலத்தில் கைது செய்ய துடித்தனர். ஆனால் அது முடியவில்லை. அப்போது அவர் ஒரு நிகழ்ச்சிக்காக திருப்பதி போக இருந்தார். உடனே திமுகவின் தலைமையகத்தில் இருந்து அவருக்கு போன் சென்றது. தயவு செய்து நீங்க திருப்பதி போக வேண்டாம் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் அதற்கு நான் திமுக காரன் இல்லை. காங்கிரஸ்.. என்னை தடுக்க நீங்க யார்.. என்று கூறினார்.
உடனே நான் திமுக தலைவராக பேசவில்லை.. முதல்வராக நான் சொல்கிறேன் என்றார். இதற்கு அவர் என்ன பெரிய முதல்வர்.. முதல்வர் பதவியே வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு வந்தவன் நான். இந்தாளு என்ன அவ்ளொ பெரிய ஆளா ஆகிட்டாரா.. எனக்கு உத்தரவு போட.. நான் போவேன் என்று சொன்னார்.. அப்போது தலைவர் ராஜாராமுக்கு போன் செய்து கொஞ்சம் அவரை புரிந்துகொள்ள சொல்லுங்கள்..
அவருக்கு உத்தரவு போடுகிற அளவுக்கு எல்லாம் நான் பெரிய ஆள் இல்லை. அவரை கைது செய்ய மத்திய அரசு துடித்துக் கொண்டு இருக்கிறது. அவரை தமிழ்நாட்டு எல்லையில் இருக்கும் வரை நான் பாதுகாப்பேன்.. திருப்பதி சென்றுவிட்டால், மத்திய அரசு கைது செய்தால் என்னால் காப்பாற்ற முடியாது.. அதனால் தயவு செய்து அங்க போகவேண்டாம் என்று சொல்ல சொல்லுங்க என்றார்.
இதற்கு பிறகு தான், நான் அவரை தவறாக புரிந்துகொண்டேன்.. அவருக்கு இவ்ளோ பெரிய உள்ளமா என்று கடைசியாக சாகும் தருவாயில், நீங்க தான் நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். இவ்வாறு திருச்சி சிவா கூறினார்.


Click it and Unblock the Notifications
