சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்டுகளா? தொழிலாளர்கள் போர்வையில் ஊடுருவலா? போலீஸ் விளக்கம்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்' தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த ஒரு மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் சமூக விரோதிகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகள் சிலர் தொழிலாளர்கள் என்ற போர்வையில் உள்நுழைந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்' தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகிறது. இங்கு 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்' (சிஐடியு) எனும் பெயரில் கடந்த ஜூன் மாதம் தொழிற்சங்கத்தைத் தொடங்கி, தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு, 8 மணி நேரம் வேலை உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை தொழிற்சாலை நிர்வாகத்திடம் முன்வைத்துள்ளனர். இதில் சில கோரிக்களையும் மற்றும் தொழிற்சங்க கோரிக்கையையும் சாம்சங் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 9ஆம் தேதி முதல் 29 நாட்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
29 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போராட்டத்தை கைவிட வேண்டும் என 6 முறை பல்வேறு கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் போராட்டத்தை கைவிடவில்லை. போராட்டம் நீண்ட நாட்களாக தொடர்ந்த நிலையில், உடனடியாக இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில், சிறு, குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தொழிலாளர்களின் தொழிற்சங்கம் அமைப்பது தொடர்பான கோரிக்கை தவிர்த்து மற்ற அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற தயாராக உள்ளதாக தெரிவித்தது. அந்த வகையில், அமைச்சர்கள் குழு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலுவலகத்தில், தொழிற்சங்கத்தினர், நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களிடம் 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
இதில் முக்கியமான கோரிக்கை என்னவென்றால், தொழிலாளர்கள் சார்பில் சிஐடியு தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்பது தான். அந்த கோரிக்கை ஏற்க சாம்சங் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் , நீதிமன்ற உத்தரவிற்கு பின்னரே சங்கம் அமைக்கும் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், "சாம்சங் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்க சாம்சங் நிறுவனம் முன் வந்திருக்கிறது. தொழிலாளர்களின் நலனும் முக்கியம், இளைஞர்களின் வேலைவாய்ப்பும் முக்கியம். சிஐடியூ அமைப்பு இந்த போராட்டத்தை கைவிட வேண்டும். காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். சிறப்பு ஊக்கத்தொகை அடிப்படை வசதிகள் போன்ற கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதலீடுக்கான உகந்த மாநிலமாக உள்ளது.
இதனிடையே அமைச்சர்களின் பேச்சுவார்த்தைக்கு பின்னரும் போராட்டம் தொடர்ந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டம் நடைபெறும் பகுதியில் போலீசார் நேற்று, சாலையோரம் இருபுறங்களும் காவலர்களை பணியில் அமர்த்தி இருசக்கர வாகனத்திலும், தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்தில் சாம்சங் ஊழியர்கள் உடை அணிந்து வருபவர்களிடம் அடையாள அட்டையை சோதனை செய்த பின்னரே அவர்களை காவலர்கள் போராட்டத்திற்கு அனுமதித்தார்கள். இதனிடையே போராட்டத்திற்கு சென்ற சாம்சங் ஊழியர்களை போலீசார், தடுத்து நிறுத்தி பேருந்தில் அடையாள அட்டை சோதனை செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் கூறும் போது, "சமூக விரோதிகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகள் சிலர் தொழிலாளர்கள் என்ற போர்வையில் உள்நுழைந்து அவர்கள் வன்முறை போராட்டமாகவும், அரசுக்கு எதிரான போராட்டமாகவும் திசை திருப்ப முயலுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது. மேலும், உண்மையான சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்களை போலீசாா் தடுக்கவில்லை" என விளக்கம் அளித்தனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications