காஞ்சிபுரத்தில் விஜயின் மாஸ்டர் பிளான்.. தவெகவில் பெரிய சம்பவம்? மக்கள் சந்திப்பில் வந்த மாறுதல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.. காஞ்சிபுரத்தில் நாளை கூட்டம் நடத்துவதற்கான காரணம் என்ன, விஜய்யின் நாளைய பிளான் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் சில இணையத்தில் கசிந்து வருகின்றன.

தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியிருந்தது..

Kanchipuram Vijay TVK Kancheepuram

இதன் பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்து வந்தார்... இதற்கு பிறகு கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சென்னைக்கே அழைத்து வந்து ஆறுதல் கூறியிருந்தார்.

அசுர வேகத்தில் தவெக தலைவர் விஜய்

இதற்கு பிறகு, அரசியல் விவகாரங்களில் கூடுதல் அக்கறையும், கவனமும் செலுத்த துவங்கிய விஜய், தவெகவின் அடுத்தடுத்த கட்சி கூட்டங்களை நடத்தி வருகிறார்.. அந்தவகையில், கட்சியின் சிறப்பு பொதுக்குழு சிறப்பாக நடந்து முடிந்தது..

இதையடுத்து, மக்கள் சந்திப்புக்கு மீண்டும் தயாரானார்.. இதற்காக தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் பேரை தேர்வு செய்து 'மக்கள் பாதுகாப்புப் படை'யை உருவாக்கினார். அவர்களுக்கு ராணுவம் மற்றும் காவல்துறையில் ஓய்வுபெற்ற அதிகாரிகளை கொண்டு பயிற்சியும் தந்தார்..

சேலம் கூட்டம் ரத்து

இதற்கு பிறகு, சேலத்தில் இருந்து டிசம்பர் 4ம் தேதி முதல் மறுபடியும் பிரச்சாரத்தை தொடங்க விஜய் முடிவு செய்தார்..

ஆனால், "திருவண்ணாமலை திருக்கார்த்திகை திருவிழா நடைபெறுவதால் விழாவுக்காக பாதுகாப்பு பணிக்காக போலீசார் செல்கின்றனர். டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் அன்றைய தினம் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். எனவே நீங்கள் கேட்கும் நாளில் அதாவது டிசம்பர் 4-ந்தேதி விஜய் பிரசார கூட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது.

விஜயின் கூட்டத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது, நீங்கள் உங்கள் தலைமையை தொடர்பு கொண்டு வேறு தேதியை முடிவு செய்து மீண்டும் அனுமதி கேட்டு மனு கொடுங்கள்" என்று தெரிவித்திருந்தனர்.. மேலும் இனி வரும் காலங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது 4 வாரங்களுக்கு முன்பு அனுமதி கேட்டு மனு கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தனர்.

காஞ்சிபுரத்தில் விஜய்

இப்படிப்பட்ட சூழலில்தான், நாளைய தினம் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது..

இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு, காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகம் மற்றும் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் காஞ்சிபுரம் மாவட்ட தவெக சார்பில் நேற்றைய தினம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளரிடம் தவெகவின் திருப்பெரும்புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் எஸ். கார்த்திக், பாதுகாப்பு கோரி கடிதம் தந்துள்ளார்..

அதில், "வரும் 23-ந் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவரச்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காஞ்சிபுரம் மாவட்ட மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சிக்கு அம்மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் மட்டுமே
இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு, அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் உள்ளே வரவும், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் அனுமதி இல்லை. எனவே இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான பாதுகாப்புகளை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.. விஜய் தரப்பில் தரப்பட்ட இந்த கடிதம் குறித்து ஆலோசனை நடைப்பெற்று வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஜேப்பியார் காலேஜ்

அதேபோல தவெக தரப்பிலும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.. அதாவது, காஞ்சிபுரம் மாவட்ட தவெக நிர்வாகிகளின் குடும்பத்தினரை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளாராம்..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட மூன்று சட்டசபை தொகுதிக்குட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, ஊராட்சி உள்ளிட்ட நிர்வாகிகளின் குடும்பத்தை சேர்ந்த 2,000 பேரை விஜய் சந்திக்க உள்ளதாகவும், இதற்காக ஸ்ரீபெரும்புதுார் அருகே, குன்னத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரிக்கு விஜய் நாளை வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

10 மணிக்கு சந்திப்பு

நாளை கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்க உள்ள நிலையில், காஞ்சிபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக இந்த சிறப்பு மக்கள் சந்திப்பு நடத்தப்படுவதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தொண்டர் படையினருடன், மக்கள் பாதுகாப்புப் படையினரும் செய்து வருகின்றனர். இதற்காக கல்லூரி வளாக உள் அரங்கத்தில் போதுமான அளவு இருக்கைகளும், தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பிளான் என்ன

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் ஜேப்பியார் கல்லூரியில் 5 நாட்களாக தவெக தொண்டரணியினர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் இந்த பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். இந்த பயிற்சியை பெறும் தொண்டரணியினருடன் விஜய் ஆலோசனை நடத்துவதாக தெரிகிறது..

அதேபோல அந்த பகுதி பொதுமக்களையும் சந்தித்து விஜய் குறைகளைக் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடையாள அட்டை அனுமதி அளிக்கப்பட்ட பொதுமக்களுடன் கல்லூரி மாணவர்களையும் விஜய் சந்தித்து பேசப்போகிறாராம்.

தமிழகத்தில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் வெளியிடப்படாமல் நீதிமன்ற பரிசீலனையில் உள்ள நிலையில, விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி உள் அரங்கில் நடப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+