’கங்குவா’ ஒரு பகல்கொள்ளை..! 350 கோடி பொய்! ஜோதிகாவுக்கு தெரியாதா? பிஸ்மி ரிவெஞ்ச்
சென்னை: தன் கணவரின் படத்தில் 30 நிமிட காட்சிகள் சரியாக இல்லை என்பதை நடிகை ஜோதிகாவே ஒப்புக் கொண்டுள்ள போது அந்தத் தேவையற்ற காட்சிகளை ஏன் படத்தில் வைக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் பிஸ்மி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் 'கங்குவா' மிகப்பெரிய விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்து இருக்கிறது. அந்தப் படம் வெளியே வருவதற்கு முன்பாகவே நடிகர் சூர்யா, 'இந்தப் படத்தை வாயைப் பிளந்து பார்ப்பார்கள்' என்று பேசி இருந்தார். அந்த வார்த்தையை அவர் பயன்படுத்திய போதே, இது எதிர்மறையான விமர்சனத்திற்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில் இதற்கு முன்பாக லிங்குசாமி இயக்கத்தில் வெளியான 'அஞ்சான்' பட புரமோஷன் பேட்டியின் போது லிங்குசாமி, 'கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் சூர்யா இந்தப் படத்தில் இறக்கி வைத்துள்ளார்' என்று பேசினார். அவரது பேச்சு படத்திற்கே எதிராக முடிந்தது. அதேபோல்தான் 'கங்குவா' படம் வெளிவருவதற்கு ஒரு வருடம் முன்பாகவே கொடுக்கப்பட்ட பில்ட் அப், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டது.
ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் ரசிகர்கள் பலர் பொங்கி எழுந்துவிட்டனர். அதைப் புரிந்து கொள்ளாமல் சூர்யாவுக்கு எதிராகச் சதித் திட்டம் நடப்பதாக ஜோதிகா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுவும் கணவருக்காக இதைச் சொல்லவில்லை. சினிமா ரசிகையாகச் சொல்லி இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இதுவரை ஒரு சினிமா ரசிகையாக அவர் வேறு எந்தப் படத்தைப் பற்றிய விமர்சனங்கள் வந்த போது இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டதே இல்லை. கணவருக்காகப் பரிந்து பேசிவிட்டு, சினிமாவுக்காக பேசுகிறேன் என்று அவர் சொன்னதை நெட்டிசன் விமர்சித்து வருகின்றனர்.
அப்படி என்றால் 'கங்குவா'வுக்கு எதிரான திட்டமிட்டுப் பொய் பிரச்சாரம் நடக்கவில்லை என்றால்?, அதை இல்லை என்று மறுக்கவே முடியாது. 'ஜெய்பீம்' படத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியின் காலெண்டரை பயன்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என சூர்யாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை அவர் கண்டுகொள்ளவில்லை. ஆகவே, அந்தப் படத்தின் மூலம் மன வருத்தம் அடைந்தவர்கள் ஒரு பக்கம் சூர்யாவின் 'கங்குவா'வை குறிவைத்து எழுதி வரும் திட்டமிட்ட விமர்சனங்களைப் பார்க்கவே முடிகிறது. ஆனால், முழு விமர்சனமும் அப்படித்தான் என சொல்லி விட முடியாது.
இந்நிலையில் சினிமா விமர்சகர் பிஸ்மி, 'கங்குவா' என்பதே பெரிய SCAM என்று பேசி இருக்கிறார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "செத்த பாம்புக்கு ஜோதிகா குளுக்கோஸ் ஏற்ற முயற்சி செய்திருக்கிறார். 'கங்குவா' மொக்கை படம் என்று நாம் சொல்லவில்லை. மக்கள் சொல்லி இருக்கிறார்கள். 'இப்படி ஒரு கேவலமான படத்தை 450ரூபாய் கொடுத்துப் பார்த்துவிட்டேன்' என்று கேரளாவில் ஒருவர் கதறிய வீடியோ வந்ததை நாம் பலரும் பார்த்தோம். தமிழ்நாட்டில் கூட வயதான ஒருவர் கொந்தளித்துப் பேசி இருந்தார். ஜோதிகா சொல்வதைப் போல திட்டமிட்டு, கோஷ்டி சேர்ந்து இந்தப் படத்தை காலி பண்ண வேண்டும் என்று யாரும் வேலை பார்க்கவில்லை.

இதே சூர்யாவின் பல படங்களுக்கு மக்கள் வெற்றியை வாரி வழங்கி இருக்கிறார்கள். அன்றைக்கு ஜோதிகா, இந்த வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு நன்றி என்று ஒரு பதிவையாவது வெளியிட்டு இருக்கிறாரா? ஒரு படம் தோல்வி அடையும் போது, அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளாமல் அந்தப் பழியைத் தூக்கி மக்கள் மீது போடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு மக்கள் மீது எந்தளவுக்கு வன்மம் இருக்கிறது? என்றே நமக்குக் கேட்கத் தோன்றுகிறது.
'கங்குவா' படம் வெளிவருவதற்கு முன்னால் படக்குழு பேசிய பேச்சுக்களை எல்லாம் இப்போது கேட்டுப் பாருங்கள். கொஞ்ச நஞ்சமா பேசினார்கள். இந்தப் படத்தைப் பார்த்தால் இந்தியாவே வாயைப் பிளக்கும். 2 ஆயிரம் கோடி வசூல் செய்யும். 50 மொழிகளில் இதை வெளியிடப் போகிறோம். சூர்யா சினிமா வாழ்க்கையிலேயே இந்தப் படம்தான் உச்சம். இப்படிப் பேசியது எல்லாமே பொய். எதையாவது பேசி மக்களை 2 நாட்களுக்கு தியேட்டருக்கு கொண்டு வந்து காசை பறித்துவிட வேண்டும் என்று பகல் கொள்கை முயற்சிதான் அதில் வெளிப்பட்டது. 'கங்குவா' என்பதே பெரிய SCAM என்று நினைக்க வைத்துவிட்டார்கள்.
ஒரு குறிப்பிட்ட தொகையில் படத்தை எடுத்துவிட்டு, அதைப் பற்றி அபரிமிதமாகப் பேச வைத்துப் பல கோடிகளை மக்களிடமிருந்து அபகரிக்க எவ்வளவு முயற்சி செய்தார்கள்? அதன் விளைவுதான் இந்தத் தோல்வி. படக்குழு 'கங்குவா' பட்ஜெட் பற்றி ஒரு தொகையைச் சொல்கிறது. இது கிரீன் மேட் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டு விஎஃப்எக்ஸ் முறையில் தயாரான படம். இதற்கு 350 கோடி என்பதே பொய்.
சினிமா பற்றித் தெரிந்தவர்கள் அதை அறிவார்கள். படத்தைப் பார்த்த ரசிகன் படம் நன்றாக இல்லை என்று கதறுகிறான். அவனுக்கு ஜோதிகாவின் ஆறுதல் என்ன? அதைச் சொல்லுங்கள். படம் அரை மணிநேரம் சுமாராகத்தான் இருந்தது என்கிறார் ஜோதிகா. அப்படி என்றால் நன்றாக இல்லாத காட்சிகளை அரை மணி நேரம் படத்தில் ஏன் வைக்க வேண்டும்? அதைத் தூக்கி எறிய வேண்டும் தானே?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications