Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாய்விட்டு சிரித்த கனிமொழி.. அண்ணாமலை குறித்த கேள்விக்கு.. என்ன இப்படி சொல்லிட்டாரு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவரிடம் அண்ணாமலை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது சட்டென சிரிக்க ஆரம்பித்துவிட்டார். பிறகு அவரே பாவம் அரசியலில் இருந்து ஒதுங்குவதாகச் சொல்லிவிட்டார் எனப் பதிலளித்தார். மேலும், அண்ணாமலைக்கு ஒரு சவாலும் விடுத்தார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளை ரெடி செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளன. அதன்படி திமுக சார்பில் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் குழுவைக் கனிமொழி தலைமை தாங்குகிறார். பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று பொதுமக்கள் கருத்துகளைக் கேட்கும் பணிகளில் கனிமொழி ஈடுபட்டுள்ளார்.

Tamil Nadu Assembly Election 2026 Kanimozhi Annamalai DMK

கனிமொழி

இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் வலியுறுத்தி வருவது தொடர்பான கேள்விக்கு அவர், "அவர்கள் தங்கள் கருத்தைச் சொல்லி இருக்கிறார்கள். முதலமைச்சரிடம் பேசி அதற்கான முடிவு எடுப்போம்" என்றார்.

எய்ம்ஸ் மருத்துவமனை

எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம் ஆக திமுக அரசே காரணம் என அண்ணாமலை சொல்லி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, "அவர் ஏதோ ஒரு கனவு உலகத்தில் இருக்கிறார். எதுவாக இருந்தாலும் மத்திய அரசு நிதி கொடுப்பதில்லை. பல காரணங்களுக்காகத் திட்டங்களை நிறுத்துகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழலில் தமிழக அரசு மேல் பழி போடுவதில் எந்தவித ஆதாரமும் இல்லாமல். தயவு செய்து உண்மை என்ன எனத் தெரிந்து கொண்டு பேசட்டும்.

செய்தியாளர்கள் கேள்வி கேட்கிறார்கள் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பதில் நியாயம் இல்லை முதலமைச்சர் ஆய்வு செய்வதை விட மத்திய அமைச்சர்கள் எத்தனை பேர் ஆய்வுக்கு வந்துள்ளனர். எய்மஸ் அறிவிப்பு வந்த பிறகு எத்தனை ஆண்டுகள் கழித்து எய்ம்ஸை தொடங்கியுள்ளீர்கள்.

மக்கள் கோரிக்கைகள்

ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் தேவை வேறு வேறு விதமாக இருக்கிறது. உதாரணத்திற்கு ராமநாதபுரத்தில் மீனவர்கள் கோரிக்கைகள் அதிகமாக இருக்கிறது. தஞ்சையில் விவசாயிகள் கோரிக்கைகள் அதிகமாக இருக்கிறது. அதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் கோரிக்கை மாறுகிறது. மதுரையைப் பொறுத்த வரை கூடுதலாகத் தொழிற்சாலைகள் வேண்டும் எனக் கேட்டுள்ளார்கள்.

சிரித்த கனிமொழி

கடந்த 5 வருடங்களில் சிறுபான்மையினருக்கு திமுக அரசு என்ன செய்துள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுள்ளாரே என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் சட்டென கனிமொழி சிரித்துவிட்டார்.

பிறகு தொடர்ந்து அவர், "இல்லைங்க.. அவரே பாவம் அரசியலில் இருந்து ஒதுங்குவதாகச் சொல்லிவிட்டார். அப்புறம் ஏன் அவரை வம்பு இழுத்துட்டு இருக்கீங்க.. சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரு மாநிலம் தமிழ்நாடு.. பாஜக ஆட்சியில் இருக்கும் எந்த மாநிலத்தில் சிறுபான்மையினர் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+