மழை காலத்தில் மக்களுக்கு உதவாமல் அண்ணாமலை அரசியல் செய்து வருகிறார்- கனிமொழி
சென்னை: மழை காலத்தில் மக்களுக்கு உதவாமல் பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்து வருகிறார் என திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
சென்னை தி நகரில் தனியார் அறக்கட்டளை சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வேலு , தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.

10 ஆயிரம் பேருக்கு
கொடியசைத்து உணவு பொருட்கள் கொண்டு செல்லும் வாகனத்தை துவக்கி வைத்தார். அந்த அறக்கட்டளையின் சார்பில் 10,000 பேருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம் மழைநீர் மேலாண்மை மற்றும் கழிவுநீர் மேலாண்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

சென்னை
சென்னையில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் இருப்பது என்பது நீண்ட கால போராட்டமாகவே உள்ளது. இதற்கான நிரந்தர முடிவுகள் விரைவில் எடுக்கப்படும். நீர் வழி பாதைகளை மறித்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டியதே வெள்ளத்துக்கு காரணம். கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.

முதல்வரின் தொகுதி
நிச்சயமாக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார். முதல்வரின் தொகுதியிலேயே குறை இருப்பதாக கூறிய அண்ணாமலை பற்றி கேள்வி எழுப்பிய போது, மழைக் காலத்தில் மக்களுக்கு உதவாமல் அண்ணாமலை அரசியல் செய்து வருவதாக கூறினார்.

ஸ்மார்ட் சிட்டி
அதிமுக ஆட்சியின் போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய பல கோடி ரூபாய் நிதி என்னவானது என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தேங்கிய மழை நீரை அகற்ற திமுக கட்சி அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications