சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4 நாட்களாக துடித்த லட்சக்கணக்கான இதயங்கள்.. மீளா துயரில் ஆழ்த்திய சுஜித்.. கனிமொழி

Google Oneindia Tamil News

Recommended Video

    Sujith Rescue Operation | தீயணைப்பு வீரர் அஜித்குமார்.. சொன்னது என்ன?-வீடியோ

    சென்னை: ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் இறப்பு ஒட்டுமொத்த சமூகத்தின் தோல்வி என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியில் பிரிட்டோ, கலா மேரி தம்பதியின் மகன் சுஜித் (2). இவன் வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.

    இவனை மீட்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்த நிலையில் 5ஆவது நாளான இன்று அதிகாலை சுஜித் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான். இதனால் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    சுஜித் என்ன ஆனான்.. ஆதங்கத்துடன் டிவி பார்த்த பெற்றோர்.. பாத்ரூம் கேனில் மூழ்கி இறந்த 2 வயது குழந்தைசுஜித் என்ன ஆனான்.. ஆதங்கத்துடன் டிவி பார்த்த பெற்றோர்.. பாத்ரூம் கேனில் மூழ்கி இறந்த 2 வயது குழந்தை

    இரங்கல்

    இரங்கல்

    சுஜித்தின் மறைவுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், கனிமொழி எம்பி, வைரமுத்து, ராகுல் காந்தி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மீளா துயர்

    இரங்கல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கனிமொழி குறிப்பிடுகையில் சுஜித்தின் இழப்பு ஒட்டு மொத்த சமூகத்தின் தோல்வி. எப்படியாவது அவன் காப்பாற்றப்படுவான், காப்பாற்ற படவேண்டும் என்று துடித்த லட்சக்கணக்கான இதயங்கள் இன்று மீளா துயரில்.

    இரவு பகல்

    இரவு பகல்

    அச்சிறுவனை இழந்து வாடும் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதல். கடந்த நான்கு நாட்களாக இரவு பகல் பாராமல் மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

    கண்ணீர்

    #RIPSujith, #SorrySujith ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரென்டாகி வருகின்றன. சுஜித்தின் மரணத்தால் ஒட்டுமொத்த தேசமே கண்ணீர் கடலில் மிதக்கின்றன.

    English summary
    Tuticorin MP Kanimozhi expresses her deepest condolence for the demise of the little kid Sujith.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X