Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு! பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது! கனிமொழி கருத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் "பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடத்த கொடுமைக்கு வழங்கப்பட்ட நியாயமான தீர்ப்பு. குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Pollachi sexual assault case

பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்களை வெளியிடாமல் அவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இந்தத் தீர்ப்பினால் பெண்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். முதல்வர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் பாலியல் வன்கொடுமை வளர்ச்சிக்கு சிபிஐக்கு மாற்றி தண்டனை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அது நிறைவேறி உள்ளது.

அதிமுக ஆட்சியில் இந்த வழக்கை விசாரிக்க முடியாமல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்தனர். ஆனால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கூறி வந்தனர் அதன் அடிப்படையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டு தீர்ப்பு கிடைத்துள்ளது. மேலும் பாலியல் குற்றங்களுக்கு எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் குற்றம் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு பாத்துக்காப்பான மாநிலமாக உள்ளது. இன்று அதிமுக வெட்கி தலைகுனிய வேண்டும். அதிமுக ஆட்சியில் யாரை காப்பாற்ற நினைத்தார்களோ அவர்களுக்கு தற்போது தண்டனை கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு நல்ல தீர்ப்பு என்று தெரிவித்தார்.

எதிர்த்து நின்றால் நீதி- ஜோதிமணி

இதுகுறித்து ஜோதிமணி எம்பி கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கொடிய குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது.

தனக்கு நிகழ்ந்த கொடூரமான பாலியல் வன்முறையோடு, குற்றவாளிகளை காப்பாற்றத் துடித்த அரசியல், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை, பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளிகளைப் போல பார்க்கும் சமூக ஒடுக்குமுறை, என்று எல்லாவற்றையும் எதிர்கொண்டு, அசைக்க முடியாத மன உறுதியோடும் துணிச்சலோடும் நீதிக்காக நெடிய போராட்டத்தை நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுத்த எமது சகோதரிகளுக்கும், அவர்தம் குடும்பங்களுக்கும் எனது அன்பும், பாராட்டுகளும்.

தனக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல்களைக் கண்டு அவமானப்பட்டு கூனிக் குறுகிவிடாமல், குற்றவாளிகளை எதிர்த்து நின்றால் நீதி நிச்சயம் கிடைக்கும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிவிடலாம் என்று நினைக்கிற குற்றவாளிகளுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக அமையட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு 8 பெண்களை 9 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம், அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+