சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை தமிழர் நலன் ஆலோசனை குழு... கனிமொழி இடத்தில் கலாநிதி... ஈழத்தமிழர்கள் அப்செட்?

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழுவில் கனிமொழி எம்.பி.க்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், ஆற்காடு வீராசாமியின் மகனை நியமித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இது கனிமொழியின் ஆதரவாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதோடு இந்த நியமனம் அதிருப்தியையும் அளித்துள்ளது.

உ.பி.:பாக். வெற்றி கொண்டாட்டம்- 3 காஷ்மீர் மாணவர்கள் உட்பட 5 பேர் கைது- தேசதுரோக சட்டம் பாய்ந்தது! உ.பி.:பாக். வெற்றி கொண்டாட்டம்- 3 காஷ்மீர் மாணவர்கள் உட்பட 5 பேர் கைது- தேசதுரோக சட்டம் பாய்ந்தது!

இலங்கை தமிழர் நலன் காப்பதில் கனிமொழி எம்.பி. காட்டிவரும் கரிசணத்தில் கால்வாசி பகுதியை கூட கலாநிதி வீராசாமி காட்டியதில்லை என அக்காவின் தம்பிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

 இலங்கை தமிழர்

இலங்கை தமிழர்

இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த சூழலில், அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவை நியமிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

 ஏமாற்றம்

ஏமாற்றம்

இதோடு அந்த குழுவில் மூத்த பத்திரிகையாளர் கோவி லெனின், வழக்கறிஞர் மனு, உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஈழத்தமிழர்கள் மீது அதீத அக்கறையும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் தீவிரமும் காட்டிவரக் கூடிய கனிமொழி எம்.பி.க்கு இந்த குழுவில் முதலமைச்சர் ஸ்டாலின் இடம் தராதது அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி ஈழத்தமிழர்கள் ஆதரவாளர்கள் வட்டத்திலும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

 வாக்கு அரசியல்

வாக்கு அரசியல்

அண்மையில் கூட தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமிற்கு சென்று தனது சொந்த நிதியிலிருந்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். இலங்கை அகதிகளுக்கு வாக்குரிமை இல்லாததால் பொதுவாக அரசியல்வாதிகள் அகதிகள் முகாம் பக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டார்கள். ஆனால் வாக்கு அரசியலைக் கடந்து அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் ஆதரவாக நின்று உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதில் கனிமொழி உறுதியாக இருப்பவர்.

 என்ன பணிகள்?

என்ன பணிகள்?

இதனால் தமிழக அரசின் இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழுவில் எப்படியும் கனிமொழி முக்கிய பங்கு வகிப்பார் எனக் கருதப்பட்டது. ஆனால், கனிமொழி இடத்தை கலாநிதி வீராசாமி பிடித்திருக்கிறார். இலங்கை அகதிகள் முகாமின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல் போன்ற பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 110 விதியின் கீழ்

110 விதியின் கீழ்

அமைச்சர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு சட்டமன்ற உறுப்பினர், ஆகியோரை தவிர்த்து இலங்கை அகதிகள் முகாம் வாழ் பிரதிநிதி ஒருவர் மற்றும் துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் பலர் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை தமிழர் நலன் காக்க ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டது திரும்பிப்பார்க்கத் தக்கது.

English summary
Kanimozhi Mp is not on the Sri Lanka Tamil Welfare Advisory Committee
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X