அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு நல்ல முடிவு- கனிமொழி பாராட்டு
Recommended Video

சென்னை: அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவாகும் என கனிமொழி எம்பி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அஜித் ரசிகர்கள் சிலர் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவில் சேர்ந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அஜித் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார்.
அதில் பாரத பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடையே நீங்கள்தான் கொண்டு செல்ல வேண்டும். மோடி தொண்டர்களாக நீங்கள் மாறி தமிழகத்தில் தாமரையை மலர செய்ய வேண்டும்.

பாஜகவில் இணைப்பு
சினிமா கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித்தான். அவர் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால் தான் பாஜகவில் இணைந்துள்ளனர் என்றார்.

சாயம் பூசக் கூடாது
அவர் சொல்லி முழுசாக ஒரு நாள் கூட ஆகவில்லை, அஜித் ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த, திரை படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே.

அரசியல் கட்சி
என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்கு காரணம், சிலவருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்த பின்னணியில் தான், என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ எந்த விதமான அரசியல் சாயம் வந்து விட கூடாது- என்று நான் சிந்தித்ததின் வீரியம் முடிவு அது என்று பாஜகவினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினரின் நடு மண்டையில் ஓங்கி அடித்தது போல் ஓர் அறிக்கையை அஜித் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நல்ல முடிவு
இது குறித்து திமுக மாநிலங்களவை எம்பி கனிமொழி கூறுகையில் அரசியலில் ஈடுபடும் விருப்பமில்லை. அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு. இதனால் நான் அஜித்தின் ரசிகை ஆகிவிட்டேன் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications