நவீன மொழிப்போர்... இந்தி எதிர்ப்பில் சளைக்காத இந்த தலைமுறை... உதயநிதி டீ ஷர்ட்... கனிமொழி பாராட்டு !
சென்னை: இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டீ-ஷர்ட் தமிழக இளைஞர்கள் மத்தியில் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் இது ஒரு நவீன மொழிப்போராக கருதப்படுகிறது.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 'இந்தி தெரியாது போடா' என்ற வாசகம் தாங்கிய டீ-ஷர்ட் அணிந்து காணொலி மூலம் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
இதனிடையே இந்திக்கு எதிரான ஒரு சிறிய தீப்பொறி இப்போது காட்டுத்தீயாக மாறி உள்ளதாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி. தெரிவித்திருக்கிறார்.

மொழி திணிப்பு
தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில் அப்போதெல்லாம் இளைஞர்கள் மத்தியில் ஏற்படாத ஒரு எழுச்சியும், கவனஈர்ப்பும் இப்போது இந்தி தெரியாது போடா என்ற வாசகம் தாங்கிய டீ-ஷர்ட் மூலம் ஏற்பட்டுள்ளது.

இந்த தலைமுறை
இந்தி தெரியாது போடா என்ற வாசகத்துடன் கூடிய சட்டையை அணிந்தவாறு திரைப்பட நடிகர் ஷிரீஷ் திமுக எம்.பி. கனிமொழியை சந்தித்து பேசியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவுடன் சிவப்பு நிற சட்டை அணிந்து நின்ற நடிகர் ஷிரீஷை பாராட்டிய கனிமொழி அவரது நண்பர்களையும் சந்தித்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், இந்த தலைமுறையும் இந்தி எதிர்ப்பில் சளைத்தவர்கள் அல்ல என்பதை இது போன்ற நிகழ்வுகள் உணர்த்துவதாக கனிமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

செந்தில் வலியுறுத்தல்
இதனிடையே திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் நிர்வாகிகள் சந்திப்பை நடத்திய போது இந்தி தெரியாது போடா என்ற டீ-ஷர்ட் அணிந்தவாறு கலந்துகொண்டார். அப்போது அவரிடம் பேசிய தருமபுரி எம்.பி.செந்தில்குமார், உங்கள் சட்டையில் எழுதப்பட்டுள்ள வாசகத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது அதில் என்ன உள்ளது என்பதை நீங்களே படித்துக்காட்டினால் நன்றாக இருக்கும் என கோரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சி தொடக்கம்
அதைக் கேட்ட உதயநிதி ஸ்டாலின், இந்தி தெரியாது போடா என டீ-ஷர்டில் இடம்பெற்ற வாசகத்தை கூறி தனது உரையை தொடங்கினார். இந்தி மொழி திணிப்புக்கு எதிரான சட்டைகளை அணிவதில் இளைஞர்கள் பெருமளவில் ஆர்வமும் ஆதரவும் அளிப்பது மகிழ்ச்சியளிப்பதாக திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

பெருகும் ஆதரவு
இந்திமொழி திணிப்பு தொடர்பாக இது வரை அரசியல் கட்சியினர் மட்டுமே எதிர்ப்பு குரல் கொடுத்து வந்த நிலையில் இப்போது திரைத்துறையினரும் மொழி திணிப்புக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தி ஆகியோர் 'இந்தி தெரியாது போடா' மற்றும் 'ஐ ஆம் எ தமிழ் பேசும் இந்தியன்' என்ற வாசகங்கள் தாங்கிய சட்டைகளை அணிந்து அந்த படத்தை வெளியிட்டுள்ளனர்.
-
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications