திமுக தென்மண்டல தேர்தல் பொறுப்பாளர் கனிமொழி... மு.க. அழகிரி இடத்தை நோக்கி நகருகிறாரா?
சென்னை: திமுகவின் தென் மண்டல தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சியின் லோக்சபா எம்.பி. கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். தென்மண்ட அமைப்பு செயலாளராக மு.க. அழகிரி வகித்த இடத்தை நோக்கி கனிமொழி நகர்ந்து கொண்டிருப்பதாகவே இது பார்க்கப்படுகிறது.
திமுகவில் ராஜ்யசபா எம்.பி. பதவி பெற்று கனிமொழி அரசியலுக்குள் நுழைந்தார். ஆனால் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு மக்கள் அளித்த வாக்குகளால் வெற்றி பெற்று எம்.பி.யானார்.

கனிமொழிக்கு தென்மண்டலம்
திமுகவின் மாநில மகளிர் அணி செயலாளராகவும் இருந்து வருகிறார் கனிமொழி. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் பணிகளை கவனிக்க மண்டல பொறுப்பாளர்கள் திமுகவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கனிமொழி கட்டுப்பாட்டில் தென்மாவட்ட திமுக?
தென்மண்டல தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். திமுகவின் தென்மாவட்டங்கள் மெல்ல மெல்ல கனிமொழி கட்டுப்பாட்டில் வந்து கொண்டிருக்கின்றன என்பதை இது காட்டுவதாகவே தெரிகிறது. இது தொடர்பாக திமுக நிர்வாகிகளிடம் நாம் பேசிய போது, மு.க. அழகிரி தனிக் கட்சி தொடங்கும் நிலையை தவிர்க்க திமுக தலைமை தீவிரமாக முயன்றது.

அழகிரியுடன் சமாதானம்
இப்போது மு.க. அழகிரி மவுனம் காத்து வருகிறார். இந்த மவுனம் தொடர்ந்து நீடிக்கும் என்றே எதிர்பார்க்கிறது கட்சி தலைமை. மு.க. அழகிரிக்கும் திமுக தலைமைக்குமான சமரசம் என்பது கருணாநிதி குடும்பத்துக்குள்ளான ஒரு நிகழ்வு. அதேநேரத்தில் கனிமொழிக்கான அடுத்தடுத்த முக்கியத்துவம் கிடைத்து வருவதையும் இது வெளிப்படுத்துகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதும் கூட என்கின்றனர்.

மு.க. அழகிரி இடத்தில் கனிமொழி?
மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டில்தான் தென் மாவட்ட திமுக இருந்தது. திமுக தென்மண்டல அமைப்பு செயலாளராக அழகிரி பதவி வகித்தார். அவருக்குப் பின்னர் திண்டுக்கல் ஐ. பெரியசாமிக்கு இந்த பதவி கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் அவர் திமுக துணைப் பொதுச்செயலாளராக்கப்பட்டார். தற்போது கனிமொழிக்கு தென்மண்டல தேர்தல் பொறுப்பாளர் பதவி என்பது அழகிரி வகித்த இடத்தை நோக்கிய நகர்வுதான் என்பதாவே பார்க்கிறோம் என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications