விஸ்வகுருவா? யாரு பிரதமரா? அப்பறம் சீனாவை பார்த்து பயந்து நடுங்குவது ஏன்? கனிமொழி அட்டாக்
சென்னை: விஸ்வகுரு என்று சொல்லிக் கொள்ளும் மோடி, சீனாவை பார்த்து பயந்து நடுங்குவது ஏன்? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல்-19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி இன்று (08/04/2024) தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி உட்பட்ட மசூதி காலனியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

கனிமொழி பேசியதாவது: இந்த தேர்தல் என்பது, நாம் அரசியல் அமைப்பு சட்டத்தைப் பாதுகாக்கக் கூடிய தேர்தல், நம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய தேர்தலாகும், இந்நாட்டின் அடித்தட்டு மக்கள், சாமானிய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய தேர்தல், பாஜக கையிலிருந்து நாம் நாட்டை மீட்டெடுக்கக்கூடிய ஒரு தேர்தல் ஆகும்.
இந்த தேர்தல் என்பது நாம் நாட்டின் 2வது சுதந்திரப் போராட்டமாகும். ஏனென்றால் இந்நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளதா, ஏழை எளிய சாமானிய மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்ற பதில் மட்டுமே உள்ளது.
நாடாளுமன்றத்தில் மிக முக்கியமாக இருப்பது விவாதம், பேச்சுவார்த்தை, ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்ததுக்கு பிறகு விவாதமும் இல்லை பேச்சுவார்த்தையும் இல்லை. மக்கள் பிரச்சினை குறித்துப் பேசினால் பதிலே அளிப்பதில்லை, பொதுவாகவே பாஜகவிற்கு மற்றவர்கள் பேசுவது காதுகளில் விழாது.
விவசாய சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்த்துப் போராடினோம், வெளிநடப்பு செய்த ஐந்து நிமிடத்தில் திரும்ப அவைக்கு வந்து விட்டோம், அந்த ஐந்து நிமிடத்தில் தொழிலாளருக்கு எதிரான தொழிலாளர் திருத்தச் சட்டத்தை பாஜக கொண்டு வந்தது.

இந்தியா வரலாற்றில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டது இந்த பாஜக ஆட்சியில் தான். பாஜகவிற்கு எதிராக ஏனென்று கேள்வி கேட்ட காரணத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
நம் நாட்டை சுற்றியுள்ள எந்த நாட்டிடனும் நட்புறவுடனும் பாஜக இருந்ததில்லை, பல காலமாக நம்முடன் நட்புடன் இருந்த நாடுகள் தற்போது நட்பை முறித்துக் கொண்டனர். மாலத்தீவில் இராணுவ தளவாளங்களை எடுக்கக் கூறிவிட்டனர் இந்த பாஜகவால்.
சீனா நமது நாட்டு எல்லைகளை ஆக்கிரமித்து விட்டது, இதைக் கேள்வி கேட்க நம் நாட்டின் விஸ்வகுரு இரும்பு மனிதர் எனக் கூறும் மோடியால் முடியவில்லை நாம் கேட்டாலும் பதில் அளிக்க இயலவில்லை எனத் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications