கனிமொழியை உருக வைத்த பிரேமலதா! கையில் இருந்த அந்த பொருள்.. பார்த்ததுமே தந்த எமோஷனல் ரியாக்ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் களத்தில் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் கொள்கைகளை விட தற்போது சென்டிமெண்ட் மற்றும் ராசி பலன்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.. அந்தவகையில் தேமுதிக தலைவர் பிரேமலதா குறித்த ஒரு செய்தி, சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது. திமுக கூட்டணியுடன் இணைந்து இந்த முறை தேர்தலை சந்திக்கும் பிரேமலதா, தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளார்.. அப்போதுதான் அவரிடம் இப்படியொரு மாற்றத்தை காண முடிந்தது.

தேர்தல் காலம் வந்துவிட்டாலே அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மத்தியில் கொள்கைகளைத் தாண்டி சென்டிமெண்ட் விஷயங்களும் அதிகம் பேசப்படும். குறிப்பாக வேட்புமனுத் தாக்கல் செய்வது முதல் வாக்கு சேகரிப்பு வரை பல ராசி மற்றும் அதிர்ஷ்ட முறைகளை வேட்பாளர்கள் பின்பற்றுவது வழக்கம்..

Premalatha Kanimozhi DMDK DMK Tamil Naud Assembly Election 2026 Tamil Nadu Election 2026 Diamond Jewelry Vridhachalam Political Sentiment Viral News 2026

இதில் நகை மற்றும் தங்கம் தொடர்பான சென்டிமெண்ட்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.. அதிகப்படியான தங்க நகைகளை அணிவது வாக்காளர்கள் மத்தியில் எதிர்மறை எண்ணத்தை உருவாக்கிவிடக்கூடாது என்பதில் அவர்கள் கவனம் செலுத்தினாலும், அதிர்ஷ்டம் தரும் என்று நம்பப்படும் குறிப்பிட்ட மோதிரங்கள் அல்லது ராசிக் கற்கள் பதித்த ஆபரணங்களை அணிவதை தவிர்ப்பதில்லை..

வேட்பாளர்களின் ஆழமான நம்பிக்கை

தேர்தல் வெற்றியை தீர்மானிப்பதில் கிரகங்களின் நிலை முக்கியம் என்று நம்பும் வேட்பாளர்கள் தங்களின் ஜாதகத்திற்கு ஏற்ற நவரத்தின கற்கள் பதித்த மோதிரங்களை அணிகிறார்கள்.

அதுவும் பிரச்சார காலங்களில் இந்த மோதிரங்கள் நேர்மறை ஆற்றலைத் தரும் என்றும் வெற்றிக்கு உதவும் என்றும் அவர்கள் எக்கச்சக்கமாகவே நம்புகிறார்கள். சில வேட்பாளர்கள் தங்களின் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வங்களின் உருவம் பொறித்த பதக்கங்களைச் சட்டையின் உள்ளே மறைவாக அணிந்து கொள்வதும் வழக்கமாக உள்ளது.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது தாக்கல் செய்யப்படும் நகை விவரங்களில் கூட சிலர் பழைய நகைகளை விற்பனை செய்யாமல் அப்படியே வைத்திருப்பார்கள்.. அந்த நகைகள் குடும்பத்திற்கு அதிர்ஷ்டம் கொண்டு வந்தவை என்ற சென்டிமெண்ட் காரணமாக அவற்றை மாற்றாமல் பராமரிக்கிறார்கள்..

சென்டிமெண்ட் ராசி

இப்போதைய 2026 தேர்தல் சூழலில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.. உரிய ஆவணங்கள் இல்லாமல் நகைகளை கொண்டு செல்வது சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் சென்டிமெண்ட் ரீதியாக நகை வாங்குவதையும் வேட்பாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் கையாள்கிறார்கள்.

வேட்பாளர்கள் எவ்வளவுதான் சென்டிமெண்ட் மற்றும் ராசி அடிப்படையில் நகைகளை அணிந்தாலும் மக்களின் தீர்ப்பு அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமைகிறது.. இருந்தாலும் இந்த தேர்தல் களத்தில் வேட்பாளர்களின் ஒவ்வொரு அசைவிலும் சென்டிமெண்ட் கலந்து இருப்பது தெளிவாகவே தெரிகிறது.. நகை விஷயத்திலும் அவர்கள் காட்டும் இந்த அக்கறை தேர்தல் அரசியலின் ஒரு சுவாரஸ்யமான பகுதியாகவே பார்க்கப்படுகிறது..

பிரேமலதாவின் வைர நகை சென்டிமெண்ட்

அந்தவகையில் தேமுதிக பிரேமலதாவிடமும் ஒரு மாற்றம் தென்படுகிறது.. எப்போதுமே ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்.. முக்கிய செயல்களுக்கு ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்பார்.. திமுக கூட்டணியையும் அதுபோலவே அவர் முடிவு செய்தார்.. ஆனால் அவரது பேச்சு கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது..

இதனால் அவர் ஏதோ பிரச்னை இருப்பதாக கருதி மீண்டும் ஜோதிடர் ஆலோசனையை நாடினாராம்.. சோழியை உருட்டி பார்த்த கேரள ஜோதிடர், பிரேமலதா தங்கத்திற்கு பதிலாக வெள்ளி, வைரம், பிளாட்டினம் நகைகள் அணியலாம் என்று சொன்னாராம்... ராசிப்படி அவற்றை அணிந்தால் வெற்றி கைகூடும், நினைத்தது நடக்கும், பதவிகள் தேடி வரும் எனவும் ஜோதிடர் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக தெரிகிறமு.

இதையடுத்தே, வைரம் மற்றும் பிளாட்டின நகைகளை அணிந்து பிரேமலதா பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளார்.. சமீபத்தில் விருத்தாசலம் தொகுதியில் பிரசாரம் செய்த திமுக துணைப் பொதுச்செயலர் கனிமொழியும், பிரேமலதாவின் நகை, ஆடை அலங்காரம் சிறப்பாக இருப்பதாக வாழ்த்திவிட்டு சென்றாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+