கண்ணாடிவிரியனா? சுரட்டை விரியனா? விறகு கட்டைக்குள் ஒளிந்து வேட்டையாடும் நம்பர் 1 விஷ பாம்பு இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் பல வகை பாம்புகள் இருந்தாலும் நாகம், கண்ணாடிவிரியன், கட்டுவிரியன், சுரட்டை விரியன் ஆகிய 4 வகை பாம்புகள் மட்டுமே கொடிய விஷம் உடையவை. இவைதான் இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகின்றன. இதில், கண்ணாடிவிரியன், சுரட்டை விரியன் இரண்டு வகையான பாம்புகளின் தன்மை என்ன? இவை எப்போது மனிதனை தாக்கும்? இந்த பாம்புகள் கடித்ல் ஏற்படும் விளைவுகள் என்ன? பாம்பு கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டம்? இவைகளை பற்றியெல்லாம் தெரிந்து வைத்து கொள்வது நல்லது.. இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

விஷப் பாம்புகளில் சுரட்டை விரியனும், கண்ணாடி விரியனும் மிக முக்கியமானவை. இவை இரண்டுமே மனிதர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்பட்டாலும், தோற்றத்திலும் செயல்பாட்டிலும் தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டுள்ளன.

Kannadiviriyan Snake

தோற்றம் மற்றும் அடையாளம்

கண்ணாடி விரியன் பார்ப்பதற்கு தடிமனாக இருக்கும்.. அதன் உடம்பு முழுவதும் சங்கிலி தொடர் போன்ற பெரிய பழுப்பு நிற வட்டங்கள் இருக்கும்.. இது பார்ப்பதற்கு சிறிய மலைப்பாம்பு குட்டி போலவே தோற்றமளிக்கும். இதன் தலை முக்கோண வடிவில், கழுத்தை விட பருத்து காணப்படும்.

ஆனால், இதற்கு நேர்மாறானது சுரட்டை விரியன்.. பார்ப்பதற்கு சின்னதா இருக்கும்.. அதிகபட்சமாக ஒன்றரை முதல் இரண்டு அடி நீளம் மட்டுமே வளரும். இதன் தலைப்பகுதியில் அம்புக்குறி அல்லது பறவையின் கால் தடம் போன்ற ஒரு வெள்ளை நிற அடையாளம் இருக்கும். இதன் உடலின் பக்கவாட்டில் அலை அலையான வெள்ளை நிறக்கோடுகள் காணப்படும்.

விஷ பாதிப்புகள் என்ன

ஆனால், இந்த இரண்டு பாம்புகளின் விஷமும் ரத்த மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டவை. கண்ணாடி விரியன் கடித்தால் கடித்த இடம் பயங்கரமாக வீங்கும்,.. ரத்தம் உறையாமல் போவதால் சிறுநீரில் ரத்தம் வெளியேறும்... முறையான சிகிச்சை கிடைக்காவிட்டால் சிறுநீரகம் செயலிழக்க கூடும்.

சுரட்டை விரியன் சிறிய பாம்பாக இருந்தாலும், அதன் விஷம் மிகக் கொடியது. இது கடித்தால் உடலில் உள்ள திசுக்கள் அழுக தொடங்குமாம்.. உள் உறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்படும்.

நடமாட்டம் மற்றும் தாக்குதல்

இவை இரண்டுமே இரவு நேரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக வலம்வரக்கூடியவை.. இரவாடி விலங்குகள் என்பார்கள்.. புற்கள் நிறைந்த பகுதிகள், விறகு அடுக்குகள் மற்றும் விவசாய நிலங்களில் இந்த பாம்புகள் மறைந்திருக்கும். மனிதர்களை இவை தானாக வந்து தாக்காது.., எதிர்பாராத விதமாக இவற்றின் மீது மிதிக்கும்போதோ அல்லது இவற்றை அச்சுறுத்தும்போதோதான் இவை தற்காப்புக்காக தாக்குகின்றன.

இதில் கண்ணாடி விரியன் பாம்புக்கு கோபம் வந்தால், பிரஷர் குக்கர் விசிலடிப்பது போல பலமான சத்தத்தை எழுப்புமாம்.. சுரட்டை விரியன் தன் செதில்களை ஒன்றோடொன்று உரசச் செய்து "சக் சக்" என எச்சரிக்கை ஒலியை எழுப்புமாம்.. இந்த சுரட்டை விரியன் மின்னல் வேகத்தில் தாக்கும் குணம் கொண்டது.

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

பாம்பு கடித்துவிட்டால் பதற்றமடையாமல் இருப்பதே முதல் மருந்து. பதற்றப்பட்டால் இதயம் வேகமாகத் துடித்து விஷம் உடல் முழுவதும் விரைவாக பரவிவிடும். கடித்த இடத்தை அசையாமல் வைத்துக்கொண்டு, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கடித்த இடத்தில் கீறுவதோ, வாயால் விஷத்தை உறிஞ்ச முயல்வதோ கூடாது.

அதேபோல கயிறு கொண்டு மிக இறுக்கமாகக் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும், இது ரத்த ஓட்டத்தைத் தடுத்து அந்த உறுப்பையே இழக்க நேரிடும். முறையான பாம்பு விஷ முறிவு மருந்து மட்டுமே உயிரை காப்பாற்றும் என்கிறார்கள் பாம்பு பிடி நிபுணர்கள்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+