தென் மண்டல ஐஜி ஆக கண்ணன் நியமனம்! வடக்கு மண்டல ஐஜி ஆக நரேந்திரன் நாயர் நியமனம்!
சென்னை: தென் மண்டல ஐஜியாக இருந்த நரேந்திரன் நாயரை வடக்கு மண்டல ஐஜியாகவும், வடக்கு மண்டல ஐஜியாக இருந்த கண்ணனை தென் மண்டல ஐஜியாகவும் டிரான்ஸ்ஃபர் செய்துள்ளது தமிழக அரசு.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 27ஆம் தேதி அன்று 11 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார் உள்துறை செயலாளர் அமுதா. அதேபோல் அதைத் தொடர்ந்து ஜனவரி 28ஆம் தேதி 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்ற செய்தார் உள்துறைச் செயலாளர் அமுதா. அந்த வரிசையில் 2 ஐஜிக்களை இன்று பணியிடமாற்றம் செய்துள்ளார்.

இன்னும் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக ஒரே பதவியில் இருப்பவர்கள் மட்டும் பணியிடமாற்றம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயரை பொறுத்தவரை யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் தொடர்ந்து டிப்ஸ்களை கொடுத்து வருபவர். இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்.
தென் மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ள கண்ணன் ஐ.பி.எஸ்.ஸை பொறுத்தவரை கடந்த 2002ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்தவர். கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக கடந்த காலங்களில் பணியாற்றியவர். 2011 முதல் 2018 வரை மத்திய உளவுத்துறை பிரிவில் பணியாற்றி வந்த கண்ணன், 2019ஆம் ஆண்டு தமிழக காவல்துறை பணிக்கு திரும்பினார்.
சென்னை தெற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர், போக்குவரத்து பிரிவு, ஆயுதப்படை உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றிய கண்ணன் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications