மெரினா பீச் செல்லும் குழந்தைகள் கைகளில் ‛Band’ கட்டாயம்! பெற்றோர்களே நாளை கண்டிப்பாக இதை செய்யுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் ஏராளமான மக்கள் மெரினா கடற்கரைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் தான் நாளை சென்னை மெரினா கடற்கரைக்கு செல்லும் பெற்றோர் தங்களின் குழந்தைகள் பாதுகாப்பு கருதி கைகளில் போலீசார் வழங்கும் Band கட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் 3 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில் இன்று மாட்டு பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

Kannum Pongal: Chennai Police issuance of ID Cards in retrieving the lost children in Marina beach

பொதுவாக காணும் பொங்கல் தினத்தில் பொதுமக்கள் கோவில்கள் உள்பட சுற்றுலா இடங்களுக்கு குடும்பத்துடன் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சென்னையை பொறுத்தமட்டில் காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் கடற்கரை பகுதிகளில் என்ஜாய் செய்வது வழக்கம்.

அந்த வகையில் சென்னை கடற்கரையில் நாளை பல லட்சம் மக்கள் கூடுவார்கள். இதனால் போலீசார் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக சென்னை மெரினாவுக்கு பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுடன் அதிகளவில் கூடுவார்கள். இதற்கு முன்பு பல குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போய் உள்ளன. அதன்பிறகு போலீசார் கண்டுபிடித்து குழந்தைகளை அவர்களின் பெற்றோருடன் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் தான் இந்த முறை குழந்தைகளின் பாதுகாப்பில் போலீசார் அதிக கவனம் செலுத்தி உள்ளனர். அதன்படி மக்கள் அதிகம் கூடுவதால் குழந்தைகள் காணாமல் போவதை தடுக்கும் வகையில் சென்னை மாநகர போலீசார் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளனர். அதன்படி கற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்க முடியும்.

இதற்காக சென்னை பெருநகர் காவல்துறை மூலம் சிறப்பு அடையாள அட்டை (பேண்ட்) தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகள் காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுபாட்டறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அட்டையாள அட்டைகளை குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அதாவது குழந்தைகளுடன் செல்லும் பெற்றோர் இந்த அடையாள அட்டையை குழந்தைகளின் கைகளில் ஒட்ட அனுமதிக்க வேண்டும். அதில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் பெற்றோர் கைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் எழுதப்பட்டு இருக்கும். இதன்மூலம் குழந்தைகள் காணாமல் போனால் அதில் உள்ள விபரங்கள் அடிப்படையில் எளிதாக குழந்தைகளை பெற்றோருடன் சேர்க்க முடியும்.

இதனால் குழந்தைகளுடன் செல்லும் பெற்றோர் காவல் உதவி மையங்கள், தற்காலி காவல் கட்டுப்பாட்டறைகளில் இந்த அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு கடற்கரைக்கு செல்ல வேண்டும் என சென்னை மாநகர போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இன்றைய தினமும் வழக்கத்துக்கு மாறாக சென்னை மெரினா கடற்கரையில் அதிகமான மக்கள் கூடினர். இதையடுத்து இன்றும் குழந்தைகளின் கைகளில் பேண்ட் போன்று இருக்கும் அடையாள அட்டையை போலீசார் ஒட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+