‛‛ரொம்ப முக்கியம்’’.. சென்னை மக்களே கவனம்.. காணும் பொங்கலையொட்டி நாளை போக்குவரத்து மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் அதிகளவில் மெரினா பீச்சில் கூடுவார்கள். இந்நிலையில் தான் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, வாகனங்கள் பார்க்கிங் செய்ய வேண்டிய இடங்கள் குறித்து சென்னை மாநகர போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

நாளை காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை மெரினா பீச் உள்பட பிற கடற்கரைகளில் மக்கள் அதிகமாக கூடுவார்கள். இதனால் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகர போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

Kannum Pongal: How will be traffic changes in Chennai Marina due to over crowd? Chennai police explains

அதன்படி நாளைய காணும் பொங்கலையொட்டி சென்னையை பொறுத்தமட்டில் 15,500 போலீசாரும், 1,500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்ப பணியில் ஈடுபட உள்ளனர். மெரினா கடற்கரையில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டுள்ளன. சர்வீஸ் சாலைகளில் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதோடு 8 ஆம்புலன்ஸ், 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 200க்கும் மேற்பட்ட நீச்சல் தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளனர். மேலும் 13 இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கி டாக்கி, பைானகுரல் மூலம் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு செய்ய உ்ளளனர். 12 முக்கிய இடங்களில் 12 சிசிடிவி கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன. ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக சென்னை மாநகர போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛நாளை பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு போக்குவரத்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது.

மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை சாலை) அதிகரிக்கும்போது போர் நினைவு சின்னத்தில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம்போல் கலங்கரை விளக்கம் நோக்கி அனுமதிக்கப்படும். கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டு பாரதி சாலை பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

மெரினா பீச் செல்லும் குழந்தைகள் கைகளில் ‛Band’ கட்டாயம்! பெற்றோர்களே நாளை கண்டிப்பாக இதை செய்யுங்க

வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது விக்டோரியா விடுதி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். மேலும் வாகனம் நிறுத்தும் வகையில் 15 இடங்களில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஃபோர்ஷோர் சாலை, விக்டோரியா வார்டன் விடுதி, கலைவாணர் அரங்கம் பார்க்கிங், பிரசிடென்சி கல்லூரி, மெட்ராஸ் பல்கலைக்கழகம், டிடி கேந்திராவிற்கு அப்பால் ஆடம்ஸ் சாலை (சுவாமி சிவானந்தா சாலை), எம்ஆர்டிஎஸ் - சேப்பாக்கம், லேடி வெலிங்டன் பள்ளி, ராணி மேரி மகளிர் கல்லூரி, சீனிவாசபுரம் லூப் ரோடு/மைதானம், பிடபிள்யூடி மைதானம் (தலைமை செயலகம் எதிரில்), செயின்ட் பீட் மைதானம், அன்னை சத்யா நகர், ஈவிஆர் சாலை மருத்துவக்கல்லூரி மைதானம் (வேன் பார்க்கிங்), தலைமை செயலகத்தில் உள்ளே (காவல்துறை வாகனங்கள்) நிறுத்த பார்க்கிங் ஒதுக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+