Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தண்ணி கேன் போட வந்தேன் சார்.. காந்தாரா படத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காந்தாரா சாப்டர் ஒன்று படத்தில் இடம்பெற்ற பிரம்ம கலாஷா பாடலில் ஒரு காட்சியில் தண்ணீர் கேன் இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் காட்சியில் 3 நிமிடம் 6 ஆவது நொடியில் தண்ணீர் கேன் இடம்பெறுவதை சில ரசிகர்கள் கண்டுபிடித்து கிண்டல் செய்து வருகிறார்கள். இதனைக் கண்ட ரசிகர்கள் 400 ஆண்டுகளுக்கு முந்தைய கதையாக உருவான இப்படத்தில் தண்ணீர் கேன் போட வந்தது யார்? என்று கேலி செய்கிறார்கள்.

இந்திய சினிமா வரலாற்றில் மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து சுமார் 100 கோடிக்குமேல் செலவு செய்து ரிஷப் ஷெட்டி, மிக தரமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் காந்தாரா சாப்டர் ஒன்று திரைப்படத்தை எடுத்தார். இந்த படம் பிரம்மாண்ட இயக்குநர்கள் என்று போற்றப்படும் இயக்குநர்கள் எடுத்திருந்தால் சுமார் 500 முதல் 600 கோடி வரை செலவாகியிருக்கும்..

kantara chapter 1 Netizens tease a water can scene in the movie Kantara Chapter 1

அப்படி ஒரு தரமான படத்தை ரிஷப் ஷெட்டி எடுத்திக்கிறார் என்று சினிமா ரசிகர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் கிராபிக்ஸ், திரைக்கதை, காட்சியமைப்பு என எல்லாமே அருமையாக இருப்பதாக போற்றுகிறார்கள் சினிமா ரசிகர்கள். கன்னடத்தை தாண்டி, தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியான காந்தாரா வசூலில் வாரி குவித்து வருகிறது.

ரிஷப் ஷெட்டி தயாரித்து இயக்கிய இப்படத்தில், ரிஷப் ஷெட்டியே ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார். இந்த படத்தை பொறுத்தவரை பழங்குடிகள் - மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், பராம்பரியம், கலாச்சாரம் போன்றவை அற்புதமாக இருந்தது. இதுதான் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

'காந்தாரா சாப்டர் 1' படம் கடந்த அக்டேபார் 2ம் தேதி தசரா பண்டிகையை முன்னிட்டு வெளியாகியது. சுமார் 550 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக தயாரிப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன. இப்படம் குறைந்தது 700 கோடி வரை வசூல் செய்திடும் என்று கூறப்படுவதால், கன்னட சினிமா உலகினரே ஆச்சரியமாக பார்க்கிறார்கள். கேஜிஎப் ஒன்று, ஜேஜிஎப் 2 ஆகிய படங்களுக்கு பிறகு மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் என்றால் காந்தாராவின்இரண்டு பாகங்கள் தான். இப்படத்தில் வரும் எமோஷனலான காட்சிகளை பார்த்து குழந்தைகள், பெரியவர்கள் மிரண்டு போய் தியேட்டரில் கத்தும் காட்சிகள் கடந்த வாரங்களில் சமூக வலைதளங்களில் வெளியாகின.

ஆனால் இப்போது காந்தாரா சாப்டர் ஒன்று படத்தில் இடம்பெற்ற பிரம்ம கலாஷா பாடலில் ஒரு காட்சியில் தண்ணீர் கேன் இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் காட்சியில் 3 நிமிடம் 6 ஆவது நொடியில் தண்ணீர் கேன் இடம்பெறுவதை சில ரசிகர்கள் கண்டுபிடித்து கிண்டல் செய்து வருகிறார்கள். இதனைக் கண்ட ரசிகர்கள் 400 ஆண்டுகளுக்கு முந்தைய கதையாக உருவான இப்படத்தில் தண்ணீர் கேன் போட வந்தது யார்? என்று கேலி செய்கிறார்கள்.

இதை கண்ட கன்னட ரசிகர்கள், கடும் எதிர்வினையாற்றுகிறார்கள்.. நெட்டிசன் ஒருவர் கூறுகையில், அதுதான் தாழ்வு மனப்பான்மை கொண்ட கோமாளிகளின் நிலை.. உணர்ச்சியையும் யதார்த்தத்தையும் வைத்து ஒரு படத்தை உருவாக்க முடியாது, ஆனால் சிறிய தவறுகளைக் கண்டுபிடிக்க கூடுதல் நேரத்தை செலவிடுவார்கள்.. ஆனால் இந்த முட்டாள்களுக்கு மிகவும் மேம்பட்ட கேமராவும் இருந்தது தெரியாது.. இந்த படத்தில் அந்த ஷாட்டின் பின்னால் விளக்குகளும் இருந்தன. ஜோக்கர்ஸ் " என்று விமர்சித்துள்ளார். இதனிடையே பாடலை வெளியிட்ட படக்குழு அதில் அந்த தண்ணீர் கேன் காட்சியை நீக்கிவிட்டது.

kantara chapter 1 Netizens tease a water can scene2 in the movie Kantara Chapter 1
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+