மெரினாவில் மக்கள் இதை செய்யவே கூடாது.. காணும் பொங்கல் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? போலீசார் விளக்கம்
சென்னை: நாளை காணும் பொங்கல் தினத்தை ஒட்டி சென்னை மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து சென்னை பெருநகர மாநகர போலீசார் விளக்கம் அளித்தனர். போலீசார் அளித்த விவரங்களை பார்க்கலாம்.
காணும் பொங்கல் நாளை கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் அன்று மக்கள் சுற்றுலா தலங்களுக்கு அதிக அளவில் வருவார்கள் என்று எதிபார்க்கப்படுவதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை சென்னை காவல்துறை மேற்கொண்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் நாளை மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் கடலுக்கு மக்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த நிலையில், நாளை போலீஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து போலீஸ் அதிகாரிகள் இன்று விளக்கம் அளித்தனர். போலீசார் கூறியதாவது:- நாளைக்கு முக்கியமான இடங்களில் குறிப்பாக மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, தீவுத்திடல் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகம் வர வாய்ப்புள்ளது.
சிறப்பு டீம்: மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரை போன்ற முக்கியமான கடற்கரைகளில் மணல் பகுதிகளுக்கு மக்கள் வரலாம். மக்கள் கடலுக்கு செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 17 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அதுமட்டும் இன்றி முக்கியமான பணிகளான காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்கவும் குற்றங்களை தடுக்கவும் சிறப்பு டீம் போட்டுள்ளோம்.
முகம் அடையாள கேமரா: சிறப்பு கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளது. காணாமல் போன குழந்தைகள் பற்றி தகவல் தெரிவிக்க மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமகக்ள் 100-க்கு அழைக்கலாம். அல்லது இந்த மையங்களை அணுகலாம். அது மட்டும் இன்றி புது டெக்னாலஜி கருவிகளை பயன்படுத்துகிறோம். டிரோன் கருவி, முகம் அடையாள கேமரா ஆகியவற்றை பயன்படுத்துகிறோம்.
12 கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது. காமராஜர் சாலை, சர்வீஸ் சாலைகளில் கூடுதல் ரோந்து பணிகள் நடைபெறும். மெரினா பகுதியில் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். யாரும் கடல் பகுதிக்கு செல்லக் கூடாது. போலீசார் தடுப்புகள் அமைத்து இருந்தாலும் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போக்குவரத்து தொடர்பாகவும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நோ பார்க்கிங்: போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் இடமான காமராஜர் சாலை, பெசண்ட் நகர், எல்.பி ரோடு, ஈசிஆர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். நாங்கள் மக்களிடம் கேட்பது ஒன்னே ஒன்னுதான். பார்க்கிங் கொடுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை பார்க் செய்துவிட்டு செல்ல வேண்டும். மெயின் ரோட்டில் பார்க் செய்து விட்டு சென்றால் அது மற்றவர்களுக்கு பயணம் செய்ய ஒரு இக்கட்டாக இருக்கும்.
போக்குவரத்து மாற்றம்: மெரினாவில் மட்டுமே போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது. வட சென்னையில் இருந்து வருபவர்களுக்கு எந்த டைவர்சனும் கிடையாது. நேராக லைட் ஹவுஸ் க்கு போயிட்டே இருக்கலாம். லைட் ஹவுசில் இருந்து போர் நினைவுச்சின்னம் செல்லும் வாகனங்கள் மட்டும் போக்குவரத்து எவ்வளவு நெரிசல் இருக்கிறது என்பதை பொறுத்து மாற்றம் செய்யப்படும். அதிக அளவு போக்குவரத்து இருந்தால் பெல்ஸ் ரோடு சந்திப்பில் டைவர்ஷ எடுத்து விக்டோரியா சாலை வழியாக திருவல்லிக்கேணி போய் செல்ல வேண்டும்.
புத்தாண்டு போல: கிரிக்கெட் போட்டிகளின் போது கொடுக்கப்படும் மாற்றம் தான். வேறு எங்கேயுமே டைவர்ஷன் இல்லை. 3,618 கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதி மீறல்கள் கண்காணிக்கப்படும். வீலிங் போன்றவற்றில் ஈடுபட்டால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்து விடும். புத்தாண்டை எப்படி விபத்து இல்லாததாக கொண்டாடினமோ அதேபோல காணும் பொங்கலையும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பொங்கலாக கொண்டாட வேண்டும். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications