Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காரடையான் நோன்பு..விரதமுறை..தேய்பிறை அஷ்டமியாச்சே..தாலி சரடு மாற்றலாமா? இதைப் படிங்க!

காரடையான் நோன்பு விரதம் இருக்கும் பெண்கள் மோர், தயிர், பால் போன்ற பொருட்களை சாப்பிடக்கூடாது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனம் போல் மாங்கல்யம் கிடைக்க திருமணமாகாத பெண்கள் காரடையான் நோன்பு விரதம் இருப்பார்கள். திருமணமான பெண்கள் கணவரின் ஆயுள் பலம் அதிகரிக்கவும் நோய் நொடியில்லாத வாழ்க்கை அமையவும் காரடையான் நோன்பு விரதம் கடைபிடிக்கப்படுகிறது. மார்ச் 15ஆம் தேதி பங்குனி 1ஆம் தேதி காரடையான் நோன்பு கடைபிடிக்கப்படும் நிலையில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

சுமங்கலி நோன்பு, கெளரி நோன்பு என பல பெயர்களில் அழைக்கப்படும் காரடையான் நோன்பானது திருமணமான பெண்கள் தங்களின் கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கடைபிடிக்கும் ஒரு முக்கியமான விரதமாகும். திருமணமாகாத பெண்களும் தங்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் என அம்பாளிடம் வேண்டிக் கொண்டு இந்த நோன்பை கடைபிடிக்கலாம். அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்த குங்குமத்தை தினமும் நெற்றியில் இட்டு வந்தால் தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரித்து, இல்லறம் சிறக்கும் என்பது முன்னோர் வாக்கு.

Karadaiyan Nombu 2023: Nallaneram to change thali saradu do not eat this even if you forget

சாவித்ரி அனுஷ்டித்த நோன்பினை நாமும் கடைபிடித்தால் நம்முடைய தாலி பாக்கியமும் நிலைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் சாவித்ரி மேற்கொண்ட நோன்பினை நாமும் மேற்கொண்டால் அம்பிகையின் பரிபூரண அருளை பெற்று, தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு காரடையான் நோன்பு தேய்பிறை அஷ்டமி நாளில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் தாலி சரடு மாற்றலாமாக என்ற சந்தேகம் எழுவதுண்டு. கவலை வேண்டாம் விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

காரடையான் நோன்பானது மார்ச் 15 ம் தேதி புதன்கிழமை, பங்குனி முதல் தேதியன்று வருகிறது. அதே சமயம் மார்ச் 14 ம் தேதி மாலை 05.24 மணிக்கே அஷ்டமி திதி துவங்கி விடுகிறது. மார்ச் 15 ம் தேதி பகல் 03.24 வரை அஷ்டமி திதியும், அதற்கு பிறகு நவமி திதியும் உள்ளது. இதனால் அஷ்டமி நாளன்று காரடையான் நோன்பு வருவதால் அன்றைய தினம் தாலி சரடு மாற்றலாமா, கூடாதா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. அப்படி மாற்றுவதாக இருந்தால் எந்த நேரத்தில் மாற்றலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆடி பெருக்கு, மீனாட்சி திருக்கல்யாணம், காரடையான் நோன்பு போன்ற தாலி சரடு மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ள நாட்களில் திதியை பார்க்க தேவையில்லை. நல்ல நாளா என்று மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். திதி, கரணம், நட்சத்திரம் போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அன்றைய நாளில் நல்ல நேரமாக கணிக்கப்பட்டுள்ள நேரத்தில் தாலி சரடினை மாற்றிக் கொள்ளலாம்.

காரடையான் நோன்பு அன்று அதிகாலையிலேயே எழுந்து நைவேத்தியம், பூஜைக்கு தேவையானவற்றை தயார் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். புதன்கிழமை காலை 06.31 முதல் 06.47 வரை நல்ல நேரமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தாலி சரடினை மாற்றிக் கொள்ளலாம்.

சுப முகூர்த்த ஹோரை பார்த்தே தெய்வ திருமணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. நாள் மட்டுமே கணக்கு என்பதனால் இது போன்ற முக்கிய விரத நாட்களை தவற விட்டு விடாமல் அந்த நாட்களில் தாலி சரடினை மாற்றிக் கொள்வது சிறப்பானது.

காரடையான் நோன்பு விரதம் இருக்கும் பெண்கள் மோர், தயிர், பால் போன்ற பொருட்களை சாப்பிடக்கூடாது.
காரடையான் நோன்பு அன்று உருகாத வெண்ணைய் படைத்து அம்பாளை வழிபட வேண்டும்.

உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்
ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும் என்று கூறி அம்மனை வழிபட வேண்டும்.

தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்துஹூ ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாட்சி உமையே
மங்களஞ்சேர் கச்சிநகர் மன்னுகா மாட்சிமிசைத்
துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே-திங்கட்
புயமருவும் பணியணியும் பரமனுளந் தனின்மகிழுங்
கயமுகவைங் கரனிருதாள் காப்பு.

மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ
மணி மந்தர காரிநீயே
மாய சொரூபி நீ மகேஸ்வரியுமானநீ
மலையரையன் மகளான நீ,
தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ,
தயாநிதி விசாலாட்சி நீ
தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ
சரவணனை யீன்ற வளும் நீ,
பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில்
பேர்பெற வளர்த்தவளும் நீ,
பிரவணசொரூபி நீ, பிரசன்னவல்லி நீ
பிரிய வுண்ணாமுலையு நீ
ஆயிமகமாயு நீ ஆனந்தவல்லி நீ
அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்
புத்திகளைச் சொல்லவில்லையோ,
பேய்பிள்ளை யானாலும் தான்பெற்ற பிள்ளையை
பிரியமாய் வளர்க்க வில்லையோ,
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்
கதறி நானழுத குரலில்,
கடுகதனிலெட்டிலொரு கூறுமதிலாகிலுன்
காதினுள் நுழைந்த தில்லையோ
இல்லாத வன்மங்க ளென்மீதி லேனம்மா
இனி விடுவதில்லை சும்மா,
இருவரும் மடிபிடித்துச் தெருவதனில் வீழ்வதும்
இதுதரும மல்ல வம்மா,
எல்லாரு முன்னையே சொல்லியே ஏசுவார்
ஏதும் நீதியல்ல வம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

முன்னையோ சென்மாந்திர மென்னென்ன பாவங்கள்
மூடனான் செய்த னம்மா
மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டு
மோசங்கள் பண்ணி னேனோ
என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே
இக்கட்டு வந்த தம்மா
ஏழைநான் செய்தபிழை தாம்பொறுத்தருள் தந்து
என்கவலை தீரு மம்மா
சின்னங்களாகுது ஜெயமில்லையோ தாயே
சிறுநாணமாகு தம்மா,
சிந்தனை களென் மீதில் வைத்து நற்பாக்கியருள்
சிவசக்தி காமாட்சி நீ
அன்னவாகனமேறி யானந்தமாக உன்
அடியன் முன் வந்து நிற்பாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

அம்பிகையிடம் முறையிடும் மந்திரம் :
அம்பிகையிடம் முறையிடும் மந்திரம் :
எந்தனைப் போலவே செனன மேடுத்தோர்க
ளின்பமாய் வாழ்ந் திருக்க,
யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்
உன்னடியேன் தவிப்பதம்மா,
உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்
உன் பாதஞ் சாட்சியாக
உன்னையன்றி வேறு துணை இனியாரை யுங்காணேன்
உலகந்தனி லெந்தனுக்கு
பின்னை யென்றெண்ணி நீ சொல்லாமலென் வறுமை
போக்கடித் தென்னை ரட்சி
பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்
பிரியமாய்க் காத்திடம்மா
அன்னையே யின்னமுன் னடியேனை ரட்சிக்க
அட்டி செய்யா தேயம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

பாரதனி லுள்ளளவும் பாக்கிபத்தோ டென்னைப்
பாங்குடனி ரட்சிக்கவும்,
பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த
பாலருக் கருள் புரியவும்
சீர்பெற்ற தேசத்தில் சிறுபிணிகள் வாராமல்
செங்கலிய ளணு காமலும்,
சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து
ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்,
பேர்பெற்ற காலனைப் பின்றொடர வொட்டாமற்
பிரியமாய்ச் காத்திடம்மா.
பிரியமாயுன் மீதில் சிறியனான் சொன்னகவி
பிழைகளைப் பொறுத்து ரட்சி.
ஆறதனில் மணல் குவித்தரிய பூசை செய்தவென்
னம்மை யேகாம்பரி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னி லம்மா,
இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்
இனிஜெனன மெடுத்திடாமல்,
முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்
முக்காலும் நம்பினேனே,
முன் பின்னுந்தோணாத மனிதரைப் போலநீ
முழித்திருக்காதே யம்மா,
வெற்றி பெறவுன் மீதில் பக்தியாய் நான் சொன்ன
விருத்தங்கள் பதினொன்றையும்
விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை
விமலனாரேசப் போறார்,
அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்
அருங்குறை யைத் தீருமம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

என்று மந்திரம் கூறி அன்னையை வணங்க வேண்டும். இந்த விரதம் இருந்தால் குழந்தைகள், கணவனுடைய ஆயுள் மற்றும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெண்களும் தீர்க்க சுமங்கலியாக இருக்கலாம். இந்த பூஜை மிக எளிமையான பூஜைதான். நம் வீட்டிலேயே செய்யலாம். பூஜையறையில் மாவிலை தோரணம் கட்டி, சிறிய கோலம் போட்டு விட்டு ஏதாவது அம்மனின் படத்தை வைத்து மஞ்சள் குங்குமம் வைத்து காரடையான் அடையை நிவேதனம் செய்து பூஜை செய்யலாம்.

ஒரு வாழை இலையை வைத்து அதில் இரண்டு கார் அரிசியினால் செய்யப்பட்ட அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும். இலையில், வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப் பழங்களும் வைக்க வேண்டும். அதன் மீது நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும். அவற்றுக்கு எதிரே அமர்ந்து, இலையைச் சுற்றி நீர் தெளித்து நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு தாலிச்சரடையும் நோன்புச் சரடையும் கழுத்தில் கட்டிக்கொண்டால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+