தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை ஏன்?.. கராத்தே தியாகராஜன்
சென்னை: தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலத்தின் மரணத்திற்கு திமுக அரசு தான் காரணம் என்று நாங்கள் கூறவில்லை. தற்கொலைக்கான காரணத்தை அரசு கண்டறிய வேண்டும் என்று தான் கூறுகிறோம் என பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் பால்கனகராஜ் மற்றும் முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் பேட்டி அளித்துள்ளார்.
முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் தற்கொலை குறித்து செய்தியாளர் சந்திப்பு தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நேற்று மாலை நடந்தது.
இதில் பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் பால் கனகராஜ் மற்றும் முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பால்.கனகராஜ் பேசுகையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பல நல்ல நடவடிக்கைகளை எடுத்தவர் வெங்கடாச்சாலம். வெங்கடாச்சலத்தின் மரணம் பல சந்தேகங்களை எழுப்புவதாகவும், யாராக இருந்தாலும் உயிர் மிகவும் முக்கியமானது. தற்கொலைக்கு காரணமாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

வெங்கடாச்சலம் மரணம்
வெங்கடாச்சலத்தின் மரணத்திற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். வெங்கடாசலத்தின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டறிய வேண்டுமானால் தமிழ்நாடு அரசு காவல்துறை விசாரிக்க கூடாது எனவும் கூறினார்.

திமுக அரசு
வெங்கடாச்சலத்தின் மரணத்திற்கு திமுக அரசு தான் காரணம் என்று நாங்கள் கூறவில்லை. தற்கொலைக்கான காரணத்தை அரசு கண்டறிய வேண்டும் என்று தான் கூறுகிறோம் என கராத்தே தியாகராஜன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் தற்கொலை எண்ணத்தில் இல்லாத வெங்கடாச்சலம் தற்கொலை செய்துள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது.
Recommended Video

சமரசம்
பதவி உயர்வுக் கோரி வெங்கடாச்சலம் மனுத்தாக்கல் செய்ய இருந்தார். ஆனால் அவரிடம் சமரசம் பேசப்பட்டுள்ளது எனவும், வெங்கடாச்சலத்தின் மரணத்திற்கு லஞ்ச ஒழிப்புத் துறை தான் காரணம் என்றும், பொது நலன் கருதி தான் சிபிஐ விசாரணை கேட்கிறோம். மேலும் முதலமைச்சர் தாமக முன்வந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார்.
-
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!












Click it and Unblock the Notifications