• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"இல்லீங்க.. ரஜினி பக்கா இந்து.. ஆனால் பாஜக இந்துத்வா.. கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை".. சொல்வது கராத்தே

|

சென்னை: ரஜினி பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருக்காது என்று ரஜினியின் நெருக்கமான நண்பர் கராத்தே தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் என்றதுமே, அவர் பாஜகவின் நிழல், பாஜகவின் சாயல், பாஜகவின் பிம்பம் என்ற வகையில் சமீப கால நிகழ்வுகளும், சம்பவங்களும், பேட்டிகளும், பேச்சுக்களும், விவாதங்களும் அரசியல் களத்தில் சூழ்ந்து வருகின்றன.

இப்போது கட்சியை ஆரம்பிப்பதாக அறிவித்ததுகூட, பாஜகவின் நிர்ப்பந்தத்தினாலோ அல்லது நெருக்கடி, அழுத்தத்தினாலோ என்ற சந்தேக கணைகளும் தொடுக்கப்பட்டு வருகின்றன.. இந்த சமயத்தில் அர்ஜூன மூர்த்தியை தனது மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக ரஜினி நியமிக்கவும், அந்த சந்தேகம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டும் வருகின்றன.

"செம".. இதுதான் மு.க.ஸ்டாலின்.. ரஜினிக்கு பேஸ்புக்கிலும், போனிலும்.. நச்சென்று ஒரு வாழ்த்து!

 கராத்தே தியாகராஜன்

கராத்தே தியாகராஜன்

இதுபோக, ரஜினி கட்சி ஆரம்பித்தால், எப்படியும் அதனுடன் பாஜக கூட்டணி வைக்கும் என்றும், அதன்மூலம் திமுகவின் ஓட்டை சிதறடிக்க முடியும் என்றும் யூகங்கள் பரப்பப்பட்டு வருகின்றன... இப்படிப்பட்ட சூழலில்தான், ரஜினியின் நீண்ட கால நண்பரும், தீவிர ஆதரவாளருமான கராத்தே தியாகராஜன் அதுகுறித்த தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

கூட்டணி

கூட்டணி

இன்று ரஜினியின் பிறந்தநாளை சென்னையில் கொண்டாடிய கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், பாஜகவுடன் ரஜினி கூட்டணி அமைப்பாரா என்ற கேள்வியை கேட்டதற்கு, "இல்லீங்க.. ரஜினி சிலரை இணைத்துக்கொண்டார் என்பதை வைத்து அவர் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர், அதனால் ரஜினி பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என்றும்.. ஆனால் எனக்கு தெரிந்தவரை, அவர் பாஜகவோடு கூட்டணி அமைக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

இந்துத்துவா

இந்துத்துவா

ரஜினி சொல்லும் ஆன்மீக அரசியல் என்பது நேர்மையான அரசியல்... ரஜினி இந்து.. ஆனால் பாஜகவோ இந்துத்வா... இதைதான் நீங்கள் வேறுபடுத்தி பார்க்க வேண்டும்... இதே பாஜகவோடுதான் அன்று அதிமுகவும், திமுகவும்தான் போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி வைத்தன... ஆர்எஸ்எஸ் உடன் கருணாநிதி கூட்டணியில் இருக்கும் போது அது சமுதாய இயக்கம் என்று சொன்னவர்தான்.. அப்படி இருக்கும்போது, எனக்கு தெரிந்து, ரஜினி பாஜகவோடு போக மாட்டார் என்றே நினைக்கிறேன்.

மசூதிகள்

மசூதிகள்

8 ஆயிரம் மசூதிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உலமாக்கள் சபை தலைவர்களை ரஜினி கடந்த மார்ச் மாதம் சந்தித்து பேசினாரே.. அவ்வளவு ஏன், அவருடைய ராகவேந்திரா மண்டபமே இஸ்லாமியரிடம் இருந்து வாங்கப்பட்டதுதானே.. ரஜினிக்கு பிரதமர் மோடி நண்பர்.. அமித்ஷாவும் நண்பர்... காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிதம்பரமும் நண்பர்.. ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ரஜினிக்கு நண்பர்.. ஏன், மலேசிய பிரதமரே கூட ரஜினிக்கு நண்பர்தான்... அதனால், நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்தே அவர் மீது முத்திரை குத்த முடியாது.

திமுக

திமுக

பெண்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு கொண்டவர் ரஜினி, தமிழகத்தில் 65 சதவிகிதம் பேர் தான் வக்களிப்பார்கள் அதில் 40 சதவிகிதம் பேர் ரஜினிகாந்துக்கு தான் வாக்களிப்பார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தால் திமுகவுக்கு தான் பாதிப்பு அதிகம்.. அவங்களக்குதான் ஓட்டு வங்கி குறையும்.. ஏன்னா, திமுகவில் சரியான தலைமை இல்லை.. உதயநிதி, துர்கா ஸ்டாலின் தான் தலைவர்களாக செயல்படுகிறார்கள், ஸ்டாலின் அவைத்தலைவர் போல்தான் செயல்பட்டு வருகிறார்" என்றார்.

 
 
 
English summary
Karate Thiyagarajan says about Rajiniakanths Political Party
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X