முதல்வரை செல்லக்குமார் சந்தித்தது ஏன்.. இதுக்காகத்தான்.. கராத்தேவின் அடுத்த குண்டு
சென்னை: கிரானைட் குற்ற வழக்கிலிருந்து காப்பாற்ற கெஞ்சி முதல்வரை சந்தித்துள்ளார் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி செல்லக்குமார் என்று கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
மரத்துமேலே ச்சும்மா தூங்கிட்டிருந்த சிறுத்தையை சொறிஞ்சுவிட்ட கதையாகிவிட்டது கராத்தே தியாகராஜனை, செல்லக்குமார் எம்.பி. விமர்சித்தது. பதிலுக்கு மனிதர் போட்டு வெளுத்துக் கொண்டிருக்கிறார் தாறுமாறாக.

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜனை ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் சஸ்பெண்ட் செய்தது கட்சித் தலைமை. இதற்கு எதிராக அப்படியொன்றும் ஆத்திரம் காட்டவில்லை கராத்தே. ஆனால், ஸ்டாலின் தான் தமிழக காங்கிரஸை வழி நடத்துவதாக இவர் கூறிய கருத்துக்கு, கிருஷ்ணகிரி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான செல்லக்குமார் 'தராதரம் இல்லாதவர் பேசிய பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.' என்று வன்மமாக கீறிவிட்டார்.
இது கராத்தே தியாகராஜனை அநியாயத்துக்கு ஆத்திரப்பட வைத்துள்ளது. செல்லக்குமாரை வெச்சு கிழித்து எடுத்துக் கொண்டிருக்கிறார். கர்நாடக மாநில பொறுப்பாளராக இருந்தபோது பத்து கோடி ரூபாயை முறைகேடாக வசூல் பண்ணி அமுக்கிக் கொண்டுவிட்டார் என்று முதலில் ஒரு குண்டை தூக்கி அவர் மீது போட்ட கராத்தே, இப்போது அடுத்த ஏவுகணையை வீசியுள்ளார்.
அதில்....என்னையெல்லாம் பற்றிப் பேசுவதற்கு செல்லக்குமாருக்கு ஏதாவது அடிப்படை தகுதின்னு ஒண்ணு இருக்குதா? சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை செல்லக்குமார் சந்தித்தார். ஏன்? என்று கேட்டதற்கு 'தொகுதி பிரச்னைக்காக' என்றார். ஆனால் உண்மை அதுயில்லை.
இவர் கிரானைட் தொழில் செய்து கொண்டிருக்கிறார். செல்லக்குமார் மீது திண்டுக்கல் மாவட்டத்தில் மலையை வெட்டியதாக வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. அந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி கெஞ்சியும், புதிய கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டியும்தான் இ.பி.எஸ்.ஸை செல்லக்குமார் சந்தித்தார்.
இதுதான் உண்மை. ஆனால் வெளியே நல்லவர் போல் நாடகமாடுகிறார். உண்மையிலேயே மக்களின் குடிதண்ணீர் பிரச்னைக்காக முதல்வரை சந்திக்கலாமென சொன்ன என்னை கே.எஸ்.அழகிரி அன்று தடுத்தார். காரணமாக 'ஸ்டாலின் கோபப்படுவார்' என்றார். ஆனால் இன்று செல்லக்குமார் என்ன ஸ்டாலினின் அனுமதி வாங்கிவிட்டா முதல்வரை சந்தித்தார்?
ஆக மிக பாரபட்சமாகத்தான் இந்த தலைமை என் விஷயத்தில் நடந்திருக்கிறது. பொறுங்கள் இன்னும் பல விஷயங்களை தோல் உரித்துக் காட்டுகிறேன்." என்று கமா போட்டிருக்கிறார்.
இன்னும் முடியலையா!
- ஜி.தாமிரா
-
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications