வாழைத்தோட்டத்தில் புகுந்த உருவம்.. பதறியடித்து ஓடிய 45 வயது கர்நாடகா பெண்.. நல்லதுக்கே காலமில்லையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் வன்முறைகள் நாட்டில் அதிகரித்து வருகின்றன.. இதுபோன்ற பாலியல் குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. எனினும், சில சிறார்கள் தங்களின் எதிர்காலத்தையும், பாதுகாப்பையும் யோசிக்காமல் எடுக்கும் விபரீத முடிவுகளால், அவர்களது நடவடிக்கைகளாலும் பெற்றோர்கள் நிலைகுலைந்து போய்விடுகின்றனர்.. இந்நிலையில், கர்நாடகாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா ஜவகல் பகுதியில் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.. கடந்த 15ந்தேதி அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்கிருந்த வாழைத்தோட்டத்தில் சடலமாக கிடந்தார்.

Crime Karnataka banana plantation

விதவை பெண் பரிதாபம்

வாழைத்தோட்டத்துக்குள் நுழைந்த விவசாயிகள், பெண்ணின் பிணம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக ஜவகல் போலீசுக்கு தகவல் தந்துள்ளனர்.. போலீசாரும் வாழைத்தோட்டத்துக்கு விரைந்து சென்று, பெண்ணின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறகு இறந்து கிடந்த பெண் யார் என்பது குறித்த விசாரணையையும் ஜவகல் போலீசார் துவங்கினர்.. அப்போதுதான் உயிரிழந்த பெண் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், 45 வயதான அவரை யாரோ கொன்று உடலை வாழை தோட்டத்துக்குள் வீசியதும் தெரியவந்தது... ஆனால், அந்த பெண்ணை யார் கொன்றார்கள் என்பதற்கான துப்பு எதுவுமே கிடைக்காமல் போலீசார் திணறினர்.

17 வயது சிறுவன் சேட்டை

இதனால் அப்பெண் வசித்து வந்த பகுதியிலுள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது, கடந்த15ந்தேதி அதாவது கொலை நடந்த தினத்தன்று, பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது சிறுவன், பெண்ணுடன் சண்டை போடுவதை ஒருவர் பார்த்ததாக கூறினார்.. உடனே போலீசார் பக்கத்து வீட்டு சிறுவனை பிடித்து விசாரித்தனர்.

போலீசார் விசாரித்தபோது, சிறுவன் உளற ஆரம்பித்தான்.. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணையை நடத்தினர்.. இறுதியில், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை சிறுவன் ஒப்புக்கொண்டான். அத்துடன் போலீசாரிடம் பெண்ணை எதற்காக கொலை செய்தேன் என்றும் சிறுவன் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளான்.

வாழைத்தோட்டத்தில் பரிதாப பெண்

அதாவது கொலை செய்யப்பட்ட 45 வயது பெண், கணவரை இழந்தவராம்.. இதனால் தனியாக வசித்து வந்துள்ளார்.. வாழ்வாதாரத்துக்காக பக்கத்து ஊரிலிருந்த வாழைத்தோட்டத்தில் கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார்.. கடந்த 17 வருடங்களுக்கு முன்பு, பெண்ணின் பக்கத்து வீட்டை சேர்ந்த தம்பதி, ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.

அப்போது அந்த வீட்டுக்கு செல்லும்போதெல்லாம், இந்த பெண்ணும் குழந்தையை தூக்கி கொஞ்சி வந்துள்ளார்.. இதனால் அந்த தம்பதியை போலவே, இந்த பெண்ணும், தன் மகனை போலவே பாசம் காட்டியிருக்கிறார்.. ஆனால், குழந்தை சிறுவனாக வளர துவங்கியதுமே, பக்கத்து வீட்டு பெண்ணின் மீதான பார்வை தவறாக மாற துவங்கியது.

வாழை தோட்டத்துக்குள் அக்கப்போர்

இதை அறியாத பக்கத்து வீட்டு பெண், சிறுவனை ரெடி பண்ணி பள்ளிக்கு அனுப்புவது, மற்ற உதவிகளை செய்வது என அம்மா போலவே கவனித்து வந்தார்..

இந்நிலையில், கடந்த 15ம் தேதி வழக்கம்போல் வாழை தோட்டத்துக்கு அப்பெண் வேலைக்கு கிளம்பி சென்றார்.. அப்போது அங்கு சென்ற சிறுவன், வாழைத் தோட்டத்தில் வேறு யாரும் யாரும் இல்லாததை கவனித்தான்.. பிறகு பெண்ணிடம் சென்று, தவறாக நடக்க முயன்றுள்ளான்.. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண், அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார். ஆனாலும் சிறுவன், பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

எகிறி தப்பி ஓடிய சிறுவன்

அப்போதும்கூட, அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், பெண்ணை சரமாரியாக தாக்கியதுடன் கழுத்தையும் நெரித்து கொன்றுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டான்.

இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, சிறுவனை போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.. தாயை போல வளர்த்த 45 வயது பெண்ணை 17 வயது சிறுவன் பலாத்காரம் செய்திருப்பது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+