'அய்யோ போறாரே'.. இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்.. அரிசினங்குடி அருவியில் 23 வயது இளைஞருக்கு நடந்ததை பாருங்க!
சென்னை: கர்நாடகா மாநிலம் உடுப்பியில் ஆர்ப்பரிக்கும் அரிசினங்குடி அருவியில் வீடியோ பதிவு செய்யும்போது 23 வயது இளைஞர் கால் தவறி விழுந்ததால் அடித்துச் செல்லப்பட்டார். இந்த வீடியோ பார்ப்போரை கதிகலங்க வைத்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்கள் முன்பு வரை மழை குறைவாக இருந்த நிலையில், தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. பல்வேறு ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. மலையோர பகுதிகளில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டி வருகிறது. காட்டாற்று வெள்ளமும் கொட்டி வருகிறது.

இந்த நிலையில் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி பகுதியை சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞருக்கு விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது. உடுப்பி மாவட்டம் குந்தாபூர் அருகே உள்ள அரசினகுடி அருவியில் நீர் ஆர்பரித்து கொட்டியிருக்கிறது. அதை அருகில் போய் பார்த்தபடி வீடியோ எடுக்க விரும்பி உள்ளார்.
இதற்காக அரசினகுடி அருவிக்கு சரத்குமார் தனது நண்பர் பரத்வாஜோடு வந்திருக்கிறார். கடுமையான மழை மற்றும் தண்ணீரின் அளவு ஏரிகளில் நிரம்பி வழிவதால் அப்பகுதியில் மலையேற்றத்திற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. வனத்துறையினரின் தடையை மீறி 6கிமீ தூரம் இளைஞர்கள் மலையில் ஏறி சென்று சென்றுள்ளார்.
அங்கு அருவியில் ஆர்பரித்து கொட்டும் நீரின் முன் பாறையின் ஓரத்தில் நின்று ரீல்ஸ் எடுக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது சரத்குமார் கால் வழுக்கியதால் நிலைதடுமாறி பாறையில் விழுந்தார். அடுத்த நொடி காட்டாற்று வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். சரத்குமார் அருவிக்குள் விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட காட்சியை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தீயணைப்பு படையினர் அவரை தேடி வருகிறார்கள்.
பொதுவாக மழைக்காலங்களில் அருவிகளில் அருகில் செல்வது ஆபத்தானது. வெள்ளம் பாய்ந்தோடும் போது வேடிக்கை பார்க்கக்கூட செல்லக்கூடாது. அப்படி சென்ற பலர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார்கள். கால் இடறி வழுக்கி விழுவதற்கு வாய்ப்புகள் மிகமிக அதிகம். எவ்வளவு சுதாரிப்புடன் இருந்தாலும், அருவிகளில் இழுத்து செல்லப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே மறந்தும் ரீல்ஸ் ஆசையில் அருவிகளின் அருகில் போய் விடாதீர்கள்.
#Karnataka #KarnatakaRains
— Kiran Parashar (@KiranParashar21) July 24, 2023
23 year old Sharath Kumar, of #shivamogga district on Monday fell while shooting a video for Instagram reels Arsinagundi Falls located in Udupi district. The rescue and police team are making efforts to trace him. @IndianExpress pic.twitter.com/3IsEggXQeu












Click it and Unblock the Notifications