தமிழ்நாட்டின் கோரிக்கையை எப்போதுமே கர்நாடகா ஏற்றதில்லை.. துரும்பு கூட அசையாது.. துரைமுருகன் பேட்டி!
சென்னை: காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது, அதனால்தான் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை கர்நாடக அரசு முறையாக திறந்து விடாத நிலையில் மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது. காவிரி விவகாரம் குறித்து டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்துப் பேசிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

அப்போது பேசிய துரைமுருகன், "காவிரியில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பதை ஆராய்ந்து கூறுவதற்கு காவிரி ஒழுங்காற்று குழுவிற்கே அதிகாரம் உள்ளது. கடந்த 13ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தின் நபர்கள் ஆய்வு செய்து விட்டு 12,500 கன அடி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு தரலாம் என்று கூறினார்கள். அதன் பிறகு அடுத்த ஓரிரு நாட்களிலேயே 5000 கன அடி கொடுக்கலாம் என்று கூறுகிறார்கள். காவிரி ஒழுங்காற்று குழு இரண்டு பேருக்கும் சமமாக செயல்படுகிறதா அல்லது கர்நாடகத்திற்கு ஆதரவுக்காக செயல்படுகிறதா என மத்திய அமைச்சரிடம் கேட்டுள்ளேன்.
மத்திய அரசு இதுகுறித்து விளக்கவில்லை என்றால் மத்திய அரசு எதற்கு, காவிரி ஒழுங்காற்று குழு எதற்கு? முதலில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது அதன் பிறகு மீண்டும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. காவிரி ஒழுங்காற்று குழு ஒருதலைபட்சமாக கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். அதனால் தான் நீதிமன்றம் சென்றுள்ளோம்.
வழக்கறிஞர் நாளை நீதிமன்றத்தில் முறையிடுவதாக தெரிவித்துள்ளார். இதுவரையில் கர்நாடகா தமிழ்நாட்டின் கோரிக்கையை எந்த காலத்திலும் ஏற்றுக்கொண்டது இல்லை. எல்லா விஷயங்களுக்கும் முடியாது என்று தான் கூறியுள்ளார்கள். ஒவ்வொன்றிற்கும் போராடி தான் நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
காவிரியின் நீண்ட வரலாற்றில் ஆரம்பம் முதல் நான் இருக்கிறேன். எதையும் ஒரு நாள் கூட ஒரு துரும்பு கூட நாம் கேட்டதற்கு அவர்கள் இதுவரை அசைந்து கொடுத்ததில்லை. நாம் பெற்றிருக்கும் உரிமை அனைத்தும் உச்ச நீதிமன்றம் கொடுத்த உரிமை தான். அதேபோல் கர்நாடகாவிலிருந்து காவிரி நீரையும் நாம் பெற்று விடுவோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications