"சித்தராமையா வேண்டியவர்தான்" கர்நாடகா எதிரி நாடு போல நடந்து கொள்கிறது.. துரைமுருகன் சுளீர் அட்டாக்
சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு எதிரி நாடு போல நடந்து கொள்கிறது என்றும் கர்நாடகாவின் செயல்பாடு ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல எனவும் அமைச்சர் துரைமுருகன் விமர்சித்தார்.
காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை விடுவிக்காமல் கர்நாடகா தொடர்ந்து அடம் பிடித்து வருகிறது. காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக ஒழுங்காற்று குழு மற்றும் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

காவிரியில் நதி நீர் விவகாரத்தில் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை வழங்கும்; இதனடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையமும் உத்தரவிடும். ஆனால் இந்த உத்தரவை கர்நாடகா அரசு மதிக்காமல் சொற்ப அளவு நீரைத்தான் திறந்துவிட்டு வருகிறது. தற்போதும் காவிரியில் வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 3-ந் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூட உள்ளது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கன அடி நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட இருக்கிறது. ஆனால், இந்த தண்ணீரையும் தமிழகத்திற்கு திறக்கமுடியாது என கர்நாடகா கூறி வருகிறது. இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் கர்நாடகா எதிரி நாடு போல நடந்து கொள்வதாக அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒழுங்காற்று குழு ஒழுங்காக ஆற்றவில்லை..காரணம் நாள் ஒன்றுக்கு 13 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வலியுறுத்தினோம். அவர்கள் நாள் ஒன்றுக்கு 2,600 கன அடி நீர் திறந்து விடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இது போதாது என்பது எங்களின் நிலைபாடு. காவிரி மேலாண்மை ஆணையம் 3 ஆம் தேதி கூடும் என்று சொல்கிறார்கள். அவர்களிடம் மேல் முறையீடு செய்ய வேண்டும். அங்கும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் கோர்ட்டுக்கு போக வேண்டும்.

கர்நாடகாவில் இதுவரை இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண் பிடித்தது இல்லை. எதோ ஒரு எதிரி நாட்டோடு மோதுவது போல நினைக்கிறார்கள். அல்லது ஏதோ ஒரு சலுகை கேட்கிறோம் என நினைக்கிறார்கள். அதுவும் அல்ல.. இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம், அது விதித்த விதிப்படிதான் நாட்டு மக்கள் நடக்க வேண்டும். ஆனால், ஒரு அரசாங்கமே நடக்கமாட்டேன் என்று சொல்வது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல..
20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையை நான் பார்த்து இருக்கிறேன். 10 முதல்வர்களை பார்த்து இருக்கிறேன். சித்தராமையா எனக்கும் தலைவருக்கும் ரொம்ப வேண்டியவர்..நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் எனக்கு தெரிந்தவர்தான். ஆனால், இவர்கள் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications