கர்நாடகா மேஜிக்.! ‘குமார’ ராசி இருந்தால்.. நாளை விஜய் சிஎம்! அரசியல் வரலாற்று புத்தகம் சொல்லும் கதை!
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைவடைந்திருக்கும் நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் கூறியிருக்கும் நிலையில், இரண்டு நிறுவனங்கள் அதிமுக ஆட்சி அமைக்கும் என்கின்றனர். இந்த நிலையில் ஆக்ஸிஸ் மை இந்தியா, ஸ்பைக் மீடியா உள்ளிட்டவை தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளனர். பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் படி விஜய் 8 முதல் 20 சீட்டுகள் வரை பெறலாம் என்கின்றனர். ஒரு வேலை கர்நாடகாவில் நடந்ததை போல அரசியல் மேஜிக் நடந்தால் விஜய் முதலமைச்சராகவும் வாய்ப்பு இருக்கிறது.. அது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
2026 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், நேற்று வெளியாகியுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அரசியல் களத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளன. நேற்றைய தினம், மேற்கு வங்க 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது.

இதனையடுத்து பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகள் தொடர்ச்சியாக வெளியாகின. அவற்றில் பெரும்பாலானவை திமுக கூட்டணிக்குச் சாதகமாக அமைந்துள்ளன. அதன் படி, திமுக கூட்டணி குறைந்தபட்சம் 125 முதல் 145 தொகுதிகள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணி
சில கணிப்புகள் இதைவிட அதிகமாகவும் கூறுகின்றன. குறிப்பாக ஒரு கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 145 முதல் 170 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது திமுக மீண்டும் ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறது. அதே நேரத்தில் அதிமுக தலைமையிலான என்.டி,ஏ. கூட்டணியும் பல தொகுதிகளில் வலுவான போட்டி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. சில கணிப்புகளில் அதிமுக கூட்டணி 128 முதல் 147 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய்
இந்த தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் போட்டியில் உள்ளது. அவர்களின் கட்சிக்கு 12 முதல் 24 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக பல கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் இரண்டு நிறுவனங்கள் விஜய்க்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கின்றன. ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் 98 முதல் 120 சீட்டுகள் வரை தமிழக வெற்றிக்கழகம் பெறும் என்கிறது. அதே நேரத்தில் ஸ்பைக் மீடியா நிறுவனம் 67 முதல் 91 சீட்டுகள் வரை தமிழக வெற்றிக்கழகம் பெறும் என்கிறது.
கூட்டணி அரசியல்
அதே நிறுவனத்தின் கணிப்பின்படி 78 முதல் 95 சீட்டுகள் வரை திமுகவும், 68 முதல் 84 வரை அதிமுகவும் பெறும் என்கின்றன. இதனால் தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அந்த ஒரு நிறுவனம் மற்றும் கணித்துள்ளது. இதனால், விஜய் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றி பெற்றாலும் முதலமைச்சராக வர முடியுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசப்படுகிறது. இதற்கு 100ல் ஒரு சதவீதம் வாய்ப்பும் உள்ளது.
தனிப் பெரும்பான்மை
இந்த தேர்தலில் மொத்தம் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், ஆட்சியை அமைக்க ஒரு கட்சி அல்லது கூட்டணி குறைந்தபட்சம் 118 இடங்களை கைப்பற்ற வேண்டும். இதுதான் பெரும்பான்மை என்ற அடிப்படை விதி. இந்த நிலையில், ஒரு கட்சி 30 அல்லது 40 இடங்கள் மட்டுமே பெற்றால், அது தனியாக ஆட்சி அமைக்க முடியாது. ஆனால், அரசியல் வரலாற்று புத்தகம் வேறு கதைகளை வைத்துள்ளது. சில நேரங்களில் குறைந்த இடங்கள் பெற்ற கட்சி கூட ஆட்சியில் முக்கிய பங்காற்றும் சூழல் உருவாகும்.
தொங்கு சட்டமன்றம்
அதுதான் "தொங்கு சட்டமன்றம்". எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத போது, கூட்டணி கட்சிகள்கள் தான் ஆட்சியை தீர்மானிக்கும். அந்த மாதிரி சூழலில், 25 முதல் 30 இடங்கள் என்பது சிறிய எண்ணிக்கை என்றாலும், அது பெரிய எண்ணிக்கை தான். திமுக - அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் பெரும்பான்மையை எட்ட சில இடங்கள் குறைவாக இருந்தால், இந்த மாதிரி சிறிய கட்சிகளின் ஆதரவு அவசியமாகிறது. அப்போது தான் "யார் முதல்வர்?" என்ற பேச்சு தொடங்கும்.
கர்நாடகா மாடல்
இதற்கு இந்திய அரசியலில் முன்னாள் நடந்த ஒரு சம்பவம் எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. 2018ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் முழுமையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
குமாரசாமி
அதாவது கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. அப்போது பாஜக 104 இடங்களிலும் காங்கிரஸ் 78 இடங்களிலும் வெற்றி பெற்றது. மாநில கட்சியான ஜனதா தளம் வெறும் 37 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என நினைத்த காங்கிரஸ் ஜனதா தளம் கட்சியின் குமாரசாமியுடன் கூட்டணி வைத்தது. ஆனால் அதற்கு பிரதிபலனாக முதல்வர் பதவியை கேட்டார் குமாரசாமி.
தவெக
முன்னரே சொன்னது போல் பாஜக வரக்கூடாது என நினைத்த காங்கிரஸ் ஜனதா தளத்துக்கு ஆதரவு தெரிவித்து 115 தொகுதி என்ற பெருபான்மையை நிரூபித்து குமாரசாமிக்கு முதல்வர் பதவியை கொடுத்தது. அதற்கு பிறகு கூட்டணி உடைந்தது, குமாரசாமி பாஜகவுடன் சேர்ந்தது எல்லாம் வேறு கதை. அதே மாதிரி, தமிழகத்திலும் ஒருவேளை ஒரு பெரிய 90க்கு அருகில் இடங்கள் பெற்றாலும், தவெக 30-க்கும் மேற்பட்ட இடங்கள் பெற்றிருந்தால், இரண்டும் இணைந்து பெரும்பான்மையை எட்ட முடியும்.
யார் முதல்வர்?
அப்போது, அந்த கூட்டணியில் யார் முதல்வர்? என்பது பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவு செய்யப்படும். அந்த நிலையில், குறைந்த இடங்கள் பெற்ற தவெகவுக்கு முதல்வர் பதவி கூட கிடைக்கலாம். அதிக இடங்கள் பெற்ற கட்சிகள் பொதுவாக முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க விரும்பாது. இதனால், துணை முதல்வர், முக்கியதுறைகளை கேட்டுப் பெறலாம். இது தான் தற்போது ஆந்திர மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications