உயிர் பிரச்சினை.. தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரில் பாக்கி.. குறுவை தப்புமா? துரைமுருகன் அச்சம்
சென்னை: தமிழகத்திற்கு திறக்க வேண்டிய காவிரி நீரில் 9.2 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா பாக்கி வைத்துள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். குறுவை சாகுபடி தமிழகத்தில் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. டெல்டா பயிரை காப்பாற்றுவதற்கு காவிரி நீர் கண்டிப்பாக தேவை. இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் கடந்த மாதம் குறிப்பிட்ட அளவை விட குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது குறித்தும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் ஆலோசிப்பதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றார்.

அங்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் அவர்களை சந்தித்து பேசினார். அவரிடம் காவேரி நதிநீர் பங்கீடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தமிழகத்திற்கு காவிரி நதியில் இருந்து கர்நாடகா அரசு தரும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது.
ஒரு நாளைக்கு தோராயமாக ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். கடந்த மாதம் முதல் கடந்த மூன்றாம் தேதி வரையில் 12 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், 2.9 டிஎம்சி தண்ணீர் தான் திறந்து விடப்பட்டுள்ளது. 9.2 டிஎம்சி தண்ணீர் வேறுபாடு உள்ளது. இதனால் குறுவை சாகுபடி கூட தமிழகத்தில் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
டெல்டா பயிரை காப்பாற்றுவதற்கு காவிரி நீர் கண்டிப்பாக தேவை. இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை. எனவே இதுகுறித்து காவிரி தீர்ப்பாயம் கர்நாடகா அரசு வலியுறுத்த சொல்லுமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கிடம் கேட்டுக்கொண்டேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விடாமல் இருப்பது சட்டப்படி குற்றம் எனவும் துரைமுருகன் தெரிவித்தார்.
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications