ஆவினுக்கு உலை வைக்கும் கர்நாடகாவின் 'நந்தினி'.. தமிழ்நாட்டுக்குள் நுழைய ஜரூராக நடக்கும் பணிகள்!
சென்னை: ஆவினுக்கு உலை வைக்கும் வகையில் கர்நாடகாவின் 'நந்தினி' பால் பாக்கெட்களை தமிழ்நாட்டில் விற்பனை செய்வதற்கான பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.
கர்நாடக பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 'நந்தினி' என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நம்மூரில் எப்படி ஆவினோ அதே போல் தான் கர்நாடகாவில் நந்தினி. பச்சை நிற பாக்கெட், ஆரஞ்ச் நிற பாக்கெட் என ஆவின் பால் எப்படி விற்பனை செய்யபடுகிறதோ அதே போல் தான் கர்நாடகாவின் மூலை முடுக்கெல்லாம் நந்தினி பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நந்தினி பால் நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, மற்றும் புதுச்சேரியில் நந்தினி பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்ய விரும்புவதாகவும் மேற்காணும் மாவட்டங்களில் ஏதேனும் ஒன்றில் பால் பேக் செய்யும் வசதியுள்ள ஆலைகள் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் தமிழ்நாட்டில் பால் விற்பனையை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழில் 'நந்தினி' பால் என்று பிரிண்ட் செய்து கவர்கள் வெளியிட்டுள்ளது கர்நாடக பால்வளத்துறை. இதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் கர்நாடகாவின் நந்தினி பாலை விற்பனை செய்ய முகவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குஜராத் அமுல் நிறுவனம் தமிழ்நாட்டிற்குள் கடையை பரப்பி பால் கொள்முதலில் ஈடுபடுவதால் ஆவினுக்கு பால் ஊற்றுவதை விவசாயிகள் குறைக்க ஆரம்பித்துவிட்டனர்.
இப்போது கர்நாடகாவின் நந்தினியும் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிட்டால் ஆவின் பால் கொள்முதல் இன்னும் மோசமாகக் கூடும். இதனால் ஆவின் உயர் அதிகாரிகளும், பால் வளத்துறை அதிகாரிகளும் ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு நந்தினி பால் விற்பனையை பிற மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவிடம் காவிரியில் தண்ணீர் கேட்டால் அதை தருவதை விடுத்து, பாலை தமிழ்நாட்டில் விற்று பணமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications