Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுல் காந்தி கை குலுக்கினாரா? முகத்தை திருப்பினாரா? கார்த்தி சிதம்பரம் கொடுத்த அடடே விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்றத்திற்கு வந்த ராகுல் காந்தி தன்னுடன் கை குலுக்கினாரா இல்லை கண்டு கொள்ளாமல் சென்றாரா என்பது குறித்து சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.

சிவகங்கை எம்பியாக உள்ளவர் கார்த்தி சிதம்பரம். இவர் டிவிட்டரில் ஆக்டிவ்வாக இருப்பவர். அவ்வப்போது பாஜகவுக்கு எதிரான கருத்துகளையும் முன் வைப்பார். சமூகம் சார்ந்த கருத்துகளுக்கும் ட்விட்டரிலும் தனது பேட்டிகளிலும் பதில் அளித்தவர்.

இவர் கடந்த சில தினங்களாக மேற்கண்ட நடவடிக்கைகளுடன் சில பணிகளையும் செய்து வருகிறார். ஒரு முறை சீரியல்கள் குறித்து சீரியஸான விவாதங்களை நடத்தினார். இதை எப்போது செய்வார் என்றால், காங்கிரஸ் கட்சியில் எப்போதெல்லாம் பிரச்சினை வருகிறதோ அப்போதெல்லாம் இப்படித்தான் செய்வார்.

வேர்டுள்

வேர்டுள்

அது போல் Wordle எனும் விளையாட்டையும் விளையாடி வருகிறார். இது காங்கிரஸ் கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அப்போதெல்லாம் இந்த விளையாட்டை விளையாடினால் மனசோர்வு நீங்குவதாக கூறியிருந்தார். மேலும் அன்றைய தினம் முழுவதும் நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தி தகுதிநீக்கம்

ராகுல் காந்தி தகுதிநீக்கம்

இது எல்லாம் சரி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த வேளையிலுமா வேர்டுள் விளையாடுவது என்ற கேள்வி எழுகிறது. ஆம்! பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

எம்பி எம்எல்ஏ

எம்பி எம்எல்ஏ

எந்த ஒரு எம்பியும் எம்எல்ஏவும் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால் அந்த பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர். அதன்படி ராகுல் காந்தியும் அவசர அவசரமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஜனநாயக படுகொலை என்றும் இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் , ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

இந்த நிலையிலும் கார்த்தி சிதம்பரம் வேர்டுள் கேம் விளையாடியது காங்கிரஸ் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக கார்த்தி எந்த ஒரு பெரிய எதிர்வினையையும் ஆற்றவில்லை என தெரிகிறது. அது போல் போராட்டங்களிலும் அந்த அளவுக்கு அவர் கலந்து கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.

வீடியோ

வீடியோ

இந்த நிலையில் நேற்று முன் தினம் ஒரு வீடியோ வெளியானது. அதில் ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வந்த போது, அவருக்காக காத்திருந்த எல்லோருக்கும் அவர் கை கொடுத்தார். ராகுல் படியேறியபோது கார்த்தி சிதம்பரம் ராகுலுக்கு எதிராக சிரித்தபடியே நின்றார். உடனே கார்த்தி கை கொடுத்த போது ராகுல் கை கொடுக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிட்டார். இந்த சம்பவத்தால் கார்த்தி சிதம்பரத்தின் முகமே மாறிவிட்டது. இந்த சம்பவத்திற்கு கூட அவர் துளிகூட கவலையே இல்லாமல் வேர்டுள் விளையாடி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வேர்டுள் விளையாட்டு

வேர்டுள் விளையாட்டு

இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வேர்டுள் விளையாட எவ்வளவு நேரம் ஆகும். நீங்கள் முன்னபின்ன விளையாடி இருக்கிறீர்களா. அது விளையாட எனக்கு 3 முதல் 5 நிமிடங்கள்தான் ஆகும். நான் அதை ரெகுலராக காலையில் எழுந்ததும் விளையாடுவேன். அது போன்ற வழக்கமான பணிகளில் ஒன்றுதான் இந்த கேம்.

கை கொடுத்தாரா இல்லையா

கை கொடுத்தாரா இல்லையா


ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் அவர்களுடைய வழக்கமான நடைமுறைகளை விட்டுவிட்டார்களா என்ன? இந்த சம்பவத்திலிருந்து காங்கிரஸ் கட்சியினர் யாருமே வாக்கிங் செல்வதில்லையா, கோயிலுக்கு செல்வதில்லையா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
அதன்பின்னர் நெறியாளர் ராகுல் காந்தி கைகுலுக்காத வீடியோ வெளியானது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதறகு அவர் கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என தெரிவித்தார். இந்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை. ஆனால் அந்த வீடியோவை எந்த வகையில் பார்த்தாலும் ராகுல் முகத்தை திருப்பி கொண்டு போனது மாதிரிதான் இருக்கிறது என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+