தமிழிசை அக்கா வந்திருப்பதே "அண்ணாமலை தீபத்தை" அணைக்கத்தான்.. புது குண்டு போடும் கரு.பழனியப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழிசை அக்கா வந்திருப்பதே அண்ணாமலையை ஒன்றும் இல்லாமல் ஆக்கத்தான் என கரு பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சன் நியூஸ் தொலைகாட்சியில் திமுகவை சேர்ந்த கரு பழனியப்பன் கூறியதாவது: மத்தியில் பாஜகதான் ஆட்சிக்கு வரும் என கருத்துக் கணிப்புகள் கூறலாம். ஆனால் கள நிலவரம் என ஒன்று இருக்கிறது. மேலும் தேர்தல் வரும் வரை பாஜகவினர் பேசுவார்கள். அதன் பின்னர் யாருமே களத்திற்கு வரமாட்டார்கள்.

Karu Palaniappan criticises BJP and Annamalai

அண்ணாமலை என்ன சொல்கிறார், மேலிடத்தின் வலியுறுத்தலால்தான் நான் தேர்தலில் நிற்கிறேன் என்கிறார். பாஜகவில் தேர்தல் இல்லாத நேரத்தில் யாரெல்லாம் எகத்தாளமாக பேசினார்களோ அவர்கள் யாருமே தேர்தல் களத்திற்கு வரமாட்டார்கள்.

தமிழிசை, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிட வந்துள்ளார். இது நல்ல விஷயம்!. ஆனால் இதில் இன்னொரு செய்தியும் உள்ளது. அதாவது பாஜக 9 பேர் கொண்ட பட்டியலை வெளியிடுகிறது. ஏசி.சண்முகம், பாரிவேந்தர், தமிழிசை, நயினார் நாகேந்திரன், எல்.முருகன், அண்ணாமலை, வினோஜ் பி செல்வம், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் முதல் இரண்டு பேர் பாஜகவினரே அல்ல. அது போல் வினோஜ் செல்வம், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஏற்கெனவே நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள். பாஜகவின் பலம் ராதிகா என நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ராதிகா பேட்டியை கவனித்தீர்களேயானால், மேலிடம் சொல்லித் தான் விருதுநகரில் போட்டியிட்டேன் என்கிறார்.

தமிழகத்தில் ஏன் நிர்மலா சீதாராமன் போட்டியிடவில்லை? அவர் ராஜ்யசபா எம்பியாக கூடாது என நான் சொல்லவில்லை. ஒரு முறை மக்களை சந்தித்தால் என்னவாகிவிட போகிறது. தேர்தலுக்கு முன்பு பாஜக எத்தனை பேசினாலும் ஒரு 40 நாட்களுக்கு பாஜக எதையும் பேச மாட்டார்கள். ஏன் தேர்தல் நடக்கிறதே இப்போது சொல்லுங்களேன் உரிமை தொகை பிச்சை என்று! இப்போது சொல்லுங்களேன் சனாதனம்தான் சரி என்று!

இவ்வளவு ஏன் ஆளுநரை பேச சொல்லுங்கள் பார்ப்போம். தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு என்னவெல்லாம் பேசினார்களோ அதை எல்லாவற்றையும் நிறுத்தி விடுவார்கள். ஆனால் திமுகவும் கூட்டணி கட்சிகளும் தேர்தலுக்கு முன்னர் என்ன பேசினார்களோ அதையேதான் தேர்தலின் போதும் பேசுகிறார்கள்.

கோவை அண்ணாமலை அபத்தமாக ஒன்றை கூறியுள்ளார். அதில் கோவையில் வெப்ப நிலை கூடிவிட்டது. இதற்கு காரணம் திமுகதான் என்கிறார். எதுவாக இருந்தாலும் திமுக மீதே பழி போடுகிறார்கள். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது பாமகவின் அடிப்படை, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவே கூடாது என்பது பாஜகவின் அடிப்படை! இவர்கள் எப்படி கூட்டணி அமைத்தார்கள்?

400 தொகுதிகளில் தாமரை மலரும் என தொடர்ந்து தமிழிசை அக்கா சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் தாமரை மலரவே இல்லையே! தவ்விக் கொண்டுதானே இருக்கிறது. தமிழிசை அக்கா வந்திருப்பது அண்ணாமலை தீபத்தை அணைக்க! அண்ணாமலையை ஒன்றும் இல்லாமல் ஆக்கவே வந்துள்ளார். அவர் நினைத்தால் முடியும். பாஜகவுக்கு தமிழகத்தின் மேலும் தமிழக மக்களின் மேலும் அன்பே இருக்காது. அவர்கள் எதையெல்லாம் விதைக்க முயற்சிக்கிறார்களோ அதெல்லாம் இல்லாமல் திராவிட கருத்து விளைந்து நிற்கும் மாநிலம் இது. இவ்வாறு கரு பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+