கருணாநிதி 100! மக்கர் செய்த மைக்! லேட்டாக வந்த கே.எஸ்.அழகிரி! தலைவர்களை கவுரவித்த தொண்டர்கள்!
சென்னை: சென்னை பின்னி மில் மைதானத்தில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் தொடக்கவிழாவில் கலந்துகொண்ட தலைவர்களுக்கு திமுக தொண்டர்களை வைத்து நினைவுப் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார் அமைச்சர் சேகர்பாபு.
இதன் மூலம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இரவு பகல் பாராமல் பொதுக்கூட்டத்துக்காக உழைத்த திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியதோடு வந்திருந்த தலைவர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தை தந்திருந்தார் அமைச்சர் சேகர்பாபு.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஜூன் 7ஆம் தேதி அதாவது இன்று ஜூன் 3 2024 வரை தொண்டர்களின் இல்ல விழாவாக - மக்கள் விழாவாக - கொள்கை விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளது திமுக தலைமை. இதற்கான தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் கூட்டணிக் கட்சி தலைவர்களை அழைத்து கவுரவித்திருந்தார் ஸ்டாலின்.
கொங்கு ஈஸ்வரன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, காதர் மொகைதீன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், வைகோ, கி.வீரமணி, கே.எஸ்.,அழகிரி, உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில் அவர்களை பேச அழைப்பதற்கு முன்னர் திமுக தொண்டர்கள் மற்றும் பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மூலம் நினைவுப் பரிசும், பொன்னாடையும் அணிவிக்க வைத்தார் சேகர்பாபு.

இதுவரை திமுக மேடைகளில் காணாத காட்சியாக இது அமைந்திருந்தது. இதனிடையே தலைவர்கள் பேச ஆரம்பித்த பிறகு தொண்டர்கள் இங்கும் அங்குமாக நடந்துகொண்டிருந்ததை பார்த்து டென்ஷனான அமைச்சர் சேகர்பாபு, ஓபன் மைக்கிலேயே எல்லோரையும் இருக்கையில் அமருமாறு சவுண்ட் விட்டார்.
அதேபோல் வேல்முருகன் பேச வந்த போது மேடையின் இடது புறம் வைக்கப்பட்டிருந்த மைக் திடீரென மக்கர் செய்தது. இதனை கவனித்த ஸ்டாலின் அது குறித்து உடனடியாக சேகர்பாபுவிடம் சொல்லி என்னவென்று பாருங்கள் என உத்தரவு போட்டார். ஸ்டாலின் உட்பட எல்லா தலைவர்களும் வந்த பிறகு கே.எஸ். அழகிரி மட்டும் சற்று தாமதமாக மேடையேறினார். கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதாக கூறி சமாளித்தார்.












Click it and Unblock the Notifications