மாற்றுத்திறனாளி மாணவனிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. திருவண்ணாமலையில் உற்சாக வரவேற்பு
திருவண்ணாமலை - வேலூர் செல்லும் சாலையில் புதிதாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில், கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.
சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று 2 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். கீழ்பென்னாத்தூரில் மாற்றுத்திறனாளி மாணவனுக்கு சற்கர நாற்காலியை வழங்கி நலம் விசாரித்தார்.
Recommended Video
இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலை சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு கீழ்பென்னாத்தூர் தொகுதியில் திமுக நிர்வாகிகளால் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவருக்கு சற்கர நாற்காலியை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் மாணவனிடம் நலம் விசாரித்தார்.

ஆராஞ்சி கிராமத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றார். கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகளின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடிக்கல்வி என்னும் சிறப்பு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தற்போது வரை 1 லட்சத்து 99 ஆயிரத்து 999 மையங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆராஞ்சி ஊராட்சியில் 2 லட்சமாவது இல்லம் தேடிக்கல்வி மையத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இன்று மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்களுக்கு திருவண்ணாமலை மாடவீதி பெரிய தெருவில் உள்ள பழைய மாவட்ட திமுக அலுவலகத்தில் ஆடைகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.
இரவு 7 மணிக்கு திருவண்ணாமலை - வேலூர் செல்லும் சாலையில் புதிதாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில், கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.
இதையடுத்து நாளை காலை 9 மணியளவில் திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும், பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கியும் விழாவில் பேசுகிறார்.
முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சாலைகளில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. முதல்வராக பதவியேற்றபின் முதல்முறையாக திருவண்ணாமலைக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கின்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகையால் திருவண்ணாமலையில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications