விட்டுக் கொடுக்காத ஸ்டாலின்.. விடாப்பிடியாக நின்ற அழகிரி! ஆதரவு கொடுத்த ஒரே ஆள் மு.க.முத்து தானாம்!
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து இன்று காலை வயது முதிர்வால் காலமானார். முதல் ஆளாக சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் மு.க.ஸ்டாலின். ஆனால் கடந்த காலங்களில் அழகிரி ஆதரவாக நின்றவர் மு.க.முத்து என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சென்னையில் நடைபெற்ற முக அழகிரியின் பேரணிக்கு கலைஞர் குடும்பத்திலிருந்து முதன்முதலாக ஆதரவு தெரிவித்தவர் மு.க.முத்து என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து. பத்மாவதி-கருணாநிதி தம்பதிக்கு மகனாக பிறந்த இவர் ஆரம்பத்தில் கலைஞரின் கலை வாரிசாகவும் அரசியல் வாரிசாகவும் பார்க்கப்பட்டவர்.
ஆனால் காலப்போக்கில் சில விவகாரங்களால் கோபாலபுரத்தில் இருந்து ஒதுங்கினார். தொடர்ந்து திருவாரூரிலும் அதற்கு பிறகு சென்னைக்கும் வந்த மு.க .முத்து உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் தனது 77 வது வயதில் இன்று காலமானார்.

எம்ஜிஆர் அரசியலிலும் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது அவருக்கு போட்டியாக கலைஞர் கருணாநிதியால் கட்சிக்குள்ளும், சினிமாவுக்குள்ளும் வந்தவர். பிள்ளையோ பிள்ளை படத்தின் மூலம் தான் திரையுலகில் அதிகமானார். அதற்குப் பிறகு எம்ஜிஆரின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் மு.க.முத்து ரசிகர் மன்றம் உருவாக்கப்பட்டது. எம்ஜிஆர் போலவே நடை, உடை, பாவனை என அனைத்தையும் செய்தாலும் ஒரு சில படங்களில் மட்டுமே அவர் நடித்தார்.
அந்த வகையில் பூக்காரி, அணையா விளக்கு உள்ளிட்ட படங்கள் வெளியானது. ஆனால் அதற்குப் பிறகு தயாரிப்பாளர்கள் மு.க.முத்துவை வைத்து படம் தயாரிக்க முன்வரவில்லை. தொடர்ந்து குடிப்பழக்கத்தால் சினிமாவில் இருந்தும் அரசியலில் இருந்தும் விலகினார். அப்போதைய காலகட்டத்தில் எந்த பாடகருக்கும் இல்லாத ஒரு சிறப்பு மிக்க முத்துவுக்கு இருந்தது. அதாவது தன் படத்தில் தனக்காக பாடலையும் மு.க முத்து தான் பாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி நிறைய திறமைகள் இருந்தும் அவரது திறமைக்கேற்ற உயரத்தை மு.க.முத்துவால் கடைசி வரை அடைய முடியவில்லை. அரசிலும் சினிமாவில் இருந்தும் தானாகவே ஒதுங்கிக் கொண்டார். கலைஞர் குடும்பத்தில் அடுத்த வாரிசு யார்? என்று பிரச்சனை வந்தபோது மு.க.ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்பட்டார். மு.க.அழகிரி ஒதுக்கப்பட்டார்.
மத்திய அமைச்சராகவும் தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும் இருந்த மு.க.அழகிரியை கட்சியை விட்டு நீக்கினார் கலைஞர். மதுரையில் நிரந்தரமாக குடியேறிய அழகிரி கலைஞர் மறைவு வரை திமுகவில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. கலைஞர் மறைவுக்கு பிறகாவது திமுகவில் இணையலாம் என திட்டமிட்டு அழகிரி அதற்காக காய் நகர்த்தி வந்தார். ஆனால் தற்போது வரை அவர் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
அதே நேரத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு மதுரைக்குச் சென்ற ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அழகிரியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. மேலும் கோபாலபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முக அழகிரி தனது குடும்பத்துடன் பங்கேற்று வந்தார். ஆனால் தற்போது வரை திமுகவில் அவரால் கால் பதிக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் கலைஞர் மறைவுக்குப் பிறகும் கட்சியில் தான் சேர்த்துக்கொள்ளப்படாததால் ஆத்திரம் அடைந்து அழகிரி சென்னையில் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி பிரம்மாண்ட பேரணியை நடத்தினார்.
திருவல்லிக்கேணி காவல்நிலையம் அருகே இருந்து, கலைஞர் நினைவிடம் வரை நடைபெற்ற இந்த பிரம்மாண்ட பேரணியில் ஏராளமான கலந்து கொண்டனர். அப்போதைக்கு அந்த விவகாரம் பேசு பொருளாக இருந்தாலும், அதற்கு பிறகு எந்த அரசியல் நிகழ்விலும் அழகிரி கலந்து கொள்ளவில்லை. அவரது ஆதரவாளர்களும் மு.க ஸ்டாலின் ஆதரவாளர்களாக மாறிப் போயினர்.
அழகிரியின் பேரணியின் போது கலைஞர் குடும்பத்திலிருந்து யாருமே அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அப்போது ஆதரவு தெரிவித்த ஒரே நபர் மு.க.முத்து என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வெள்ளை தாளில் தம்பி முக அழகிரி பேரணிக்கு வாழ்த்துக்கள் இப்படிக்கு முக முத்து என ஒரு கடிதத்தை எழுதி சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார் மு.க.முத்து. அதன் மூலம் கலைஞர் குடும்பத்திலிருந்து அழகிரிக்கு ஆதரவாக நின்ற ஒரே நபர் மு.க.முத்து தான். அதற்குப் பிறகு அழகிரியும் அரசியலுக்கு வரவில்லை, மு.க.முத்துவும் அரசியலுக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications