ஓடி ஒளிபவர்.. அரசியலுக்கே தகுதியற்றவர்! விஜய்யை கடுமையாக சாடிய கருணாஸ்
சென்னை: "மக்களுக்கு பிரச்சனை என்று வருகிறபோது ஓடி ஒளிவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பிரச்சினையை மக்களோடு மக்களாக நின்று சந்திக்க திறனற்றவர் அரசியலுக்கு தகுதியற்றவர்" என்று விஜய்யை நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ் விமர்சித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது, "224வது ஆண்டு மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவு நிகழ்ச்சியில், நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உறுதிமொழியாக முக்குலத்தோர் புலிப்படை ஒன்றை கருதுகிறது. ஒட்டுமொத்தமாக இரண்டாம் உலகப் போரிலே போராடி பெற வேண்டிய அந்த சுதந்திரத்தை சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் உருவான ஐஎன்ஏ, வெற்றி பெற வேண்டிய ஒரு சூழலில்.. அதற்கு உறுதுணையாக சுபாஷோடு தோளோடு தோள் நின்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வெற்றியை தடுத்தது இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த ஆர்எஸ்எஸ், சங் பரிவாரம் கூட்டங்கள்தான். இதை யார் ஒருவரும் மறந்திருக்க முடியாது.

ஒட்டுமொத்தமாக 1801-ல் ஜம்புத்தீவு பிரகடனத்தை தேசிய நாடுகளை ஒருங்கிணைத்து அறிவித்து ஜாதி மதங்களை கடந்து அனைத்து தரப்பட்ட மக்களையும் அந்த சமூகத்தினுடைய ஜமீன்தார்கள் போன்றவர்கள் எல்லாம் ஒருங்கிணைத்து ஜம்பு தீவு பிரகடனத்தை அறிவித்த மருது சகோதரர்கள், அன்றைக்கு அவர்கள் ஐரோப்பியர்களை வெளியேறு என்று சொன்னார்கள். கிட்டத்தட்ட 224 வருடங்கள் கழித்து, இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலிலே சுதந்திர இந்தியாவிற்கு எந்த சம்பந்தமுமே இல்லாத பாஜக-ஆர்எஸ்எஸ் போன்ற சங்பரிவார கூட்டத்தை, தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்கிற உறுதிமொழியை எடுக்க வேண்டும்.
இந்த மண்ணுக்காக போராடிய மருது பாண்டியரின் குடும்பத்தார், உறவினர்கள் என 500 பேருக்கு மேலானோரை வெள்ளையர்கள் படுகொலை செய்திருக்கின்றனர். அன்றைக்கு ஐரோப்பியர்களை வெளியேறு என்று சொன்ன இந்த தமிழ்நாட்டில், சுதந்திரத்திற்காக நமது முன்னோர்கள் செய்த தியாகங்களில் ஒரு துளிகூட செய்யாத அந்த பாஜக-ஆர்எஸ்எஸ் சங்க பரிவார கூட்டத்திற்கு தமிழகத்தில் இடமில்லை என்கின்ற உறுதிமொழியை இந்த முக்குலத்தோர் புலிப்படை சார்பாக இந்த நாளிலே நாம் மனதார உறுதி ஏற்போம்.
தமிழக அரசியல் வரலாற்றில் சினிமாவில் நடித்தவர்கள் பலரும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கிறார்கள். அதனால் சினிமா துறை மட்டுமல்லாது, எந்த துறையில் இருந்து யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எல்லாருக்குமே அந்த உரிமை இருக்கு. அது இல்லைன்னு எல்லாம் சொல்றதுக்கு எல்லாம் யாருக்கும் அதிகாரமும் உரிமையும் கிடையாது.
ஆனால், இப்பொழுது வந்திருக்கக்கூடிய விஜய்யின் செயல்பாடுகள் என்ன? அவருடைய அரசியல் செயல்பாடுகள் என்ன? மக்களுடைய பிரச்சினைகளை எப்படி கையாளுகிறார்? குறிப்பாக கரூரில் 41 பேர் அப்பாவி மக்கள் இறந்த பொழுது அவருடைய செயல்பாடுகள் எப்படி இருந்துச்சுங்கறத பார்த்துதான் இன்றைக்கு பலபேர் பல விமர்சனங்களை முன் வைக்கிறாங்க. மக்களால் அரசியல் என்பது, மக்களுக்கானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட கூடியவர்கள்தான் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்.
மக்களால் நான் ஒரு அமைச்சராக, முதலமைச்சராக வரணும்னு நினைக்கக்கூடிய ஒருவர், மக்களுக்கு பிரச்சனை என்ற பொழுது ஓடி ஒளிவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பிரச்சினையை மக்களோடு மக்களாக நின்று சந்திக்க திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதியற்றவர் என்பதுதான் என்னுடைய கருத்து" என பேசியிருக்கிறார்.
-
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
“திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள்.. யாரும் தப்பிக்க முடியாது”.. அமைச்சர் CTR நிர்மல்குமார் உறுதி!











Click it and Unblock the Notifications