பாஜக பாட்டுக்கு டான்ஸ் ஆடக்கூடிய நடிகர் கிடைத்துள்ளார்.. விஜய் மீது கருணாஸ் அட்டாக்
சென்னை: "பாஜக கம்போஸ் செய்த பாட்டுக்கு டான்ஸ் ஆட ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார், தவெக அலுவலகத்தில் பூட்டு உள்ளே போட்டு இருக்கிறதா? அல்லது வெளியே போட்டு இருக்கிறதா? என்பது பனையூர் சென்று பார்த்தால் தான் தெரியும்" என நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், "அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறவுள்ள மருது சகோதர்கள் குருபூஜைக்கும், 30 ஆம் தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவிலும் பங்கேற்க வருமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தேன்.

பாஜகவை எதிர்த்து, அவர்களின் அனைத்து சவால்களையும் சமாளித்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினை ஒட்டுமொத்த இந்தியாவும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவருடைய ஆட்சி தொடர வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை" எனத் தெரிவித்தார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தை விஜய் சந்திக்காதது குறித்த கேள்விக்கு பதிலளித்த கருணாஸ், "விஜய் கரூர் செல்லாதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். பனையூரில் பூட்டு உள்ளே போட்டிருக்கிறதா? அல்லது வெளியே போட்டிருக்கிறதா? என்று போய் பார்த்தால் தான் தெரியும்.
அரசியல் என்பது மக்களுக்கானது. அப்படி அரசியலில் இருப்பவர்கள் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அங்கு சென்றிருக்க வேண்டும். அதனை செய்ய தவறியவர்களை என்னவென்று சொல்வது? அதே நேரத்தில் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நள்ளிரவே அங்கு சென்று, 'உங்களுக்காக நான் இருக்கிறேன்' என்று சொல்லக் கூடியவர் தான் உண்மையான தலைவர். அந்த வகையில், கரூரில் நடந்த துயர சம்பவத்தின் போது களத்தில் இறங்கி பணியாற்றியவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கக் கூடியவர், அவருடைய கட்சியினர், ரசிகர்கள் உயிரிழந்த சூழலில் வெளியே வராமல் இருக்கிறார் என்றால் தவெக தலைவர் விஜய் மக்களுக்கானவரா? மக்கள் பிரச்சனைக்கு களத்தில் இறங்கக்கூடியவரா? என்று மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். மேலும், பாஜக எப்போதுமே நேரடியாக வராது. ஆனால், சந்தில் சிந்து பாடி பாட்டை கம்போஸ் செய்வதற்கு நினைப்பார்கள். அதன்படி, பாஜக கம்போஸ் செய்த பாட்டிற்கு நன்றாக நடனமாடும் நடிகராக விஜய் கிடைத்துள்ளார்.
அதேபோல, அதிமுக எம்ஜிஆர் உருவாக்கிய மாபெரும் இயக்கம். என்னை போன்றவர்களுக்கு அரசியல் அடையாளம் கொடுத்த கட்சி. ஆனால், இன்று அதிமுக நடத்தும் கூட்டத்திற்கு அந்த கட்சியின் கொடியை பிடிக்காமல், தவெக கட்சிக் கொடியை அவர்கள் நிர்வாகிகளே பிடித்துள்ளனர். இவை அனைத்திற்கும் எடப்பாடி பழனிசாமி தலைமை தான் காரணம். பதவிக்காக எதையும் செய்ய துணிந்தவர் எடப்பாடி என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
தனக்காக மாபெரும் இயக்கத்தை, எந்தவிதமான ஒரு கட்டமைப்பும் இல்லாத ஒரு ரசிகர் கூட்டத்தை நம்பி, இவர்களே செட் செய்து கொடியை ஏந்தி நிற்கிறார்கள். இதனை கண்டதில் இருந்து அதிமுக தொண்டர்கள் பலரும் குமுறிக் கொண்டு இருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் முதல் காரணம் எடப்பாடி பழனிசாமி தான். அவருடைய சுயநலத்திற்காக அதிமுகவை கூட அடமானம் வைத்து விட்டு போனாலும் போவார். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்!











Click it and Unblock the Notifications