அதிமுக மீது ஊழல் புகார் கூறியவர் "தளபதி".. ஸ்டாலின் ஆட்சி சுத்தமாகவே இருக்கும்னு நம்புறேன்.. கருணாஸ்
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் கடந்த ஆட்சியை விட சிறப்பாகவே இருக்கிறது என முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருவாடாணை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர் கருணாஸ். இவர் முக்குலத்தோர் புலிகள் படையின் தலைவராக இருப்பவர். இவர் சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க பாடுபட்டவர்.
இதுகுறித்து நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்:

ஸ்டாலினின் செயல்பாடுகள்
கே: முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?
ப: என்னுடைய கருத்து என்பதை விட மாநில மக்களின் கருத்தாக பார்க்க வேண்டும். கடந்த ஆட்சியின் போது கொரோனாவை ஒழிக்க எடுத்த செயல்பாடுகள், அப்போது நடந்த ஊழல்களை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த திமுக அரசின் செயல்பாடுகள் மக்களால் வரவேற்கத்தக்க வகையில் இருக்கிறது.

மா. சுவுக்கு புகழாரம்
குறிப்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஏற்கெனவே சென்னை மேயராக இருந்தபோது திறம்பட செயல்பட்ட ஒருவர். ஒரு குடிசைவாசி மக்களும் நேரடியாக சந்திக்கக் கூடிய அளவுக்கு எளிமையானவர். எப்போதும் அவரிடம் கொடுத்த காரியத்தை திறம்பட செய்வதில் திறமையானவர். அரசு பதவியேற்று குறுகிய காலம்தான் ஆகியுள்ளது. அதாவது அரசை பெரிய அளவில் விமர்சனம் செய்யக் கூடிய கால கட்டம் இப்போது இல்லை.
அதே சமயம் இந்த குறுகிய காலகட்டத்தில் கொரோனா காலத்தில் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்பட்டிருந்தவற்றை நிறைவேற்றுவதால் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

ஸ்டாலின் ஊழல் செய்யமாட்டார்
கே: ஸ்டாலின் அவருடைய செயல்பாடுகளை நான் நம்புவதாக சொல்லியிருந்தீர். நீங்கள் நம்பும் அளவுக்கு என்ன செய்தார்?
ப: எனக்கு தெரிந்து முதல்வர் ஸ்டாலினை 3 அல்லது 4 முறை சந்தித்துள்ளேன். 1952 ஆம் ஆண்டு முதல் அமைந்த ஆட்சியில் அங்கும் இங்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் வரத்தான் செய்கின்றன. 100 ரூபாயில் 10 ரூபாயை எடுத்துக் கொண்டு மீதி 90 ரூபாய்க்கு வேலை செய்தால் அதை ஏற்கலாம். அதுவும் தவறுதான், இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் 100 ரூபாயில் 50 ரூபாயை எடுத்துக் கொண்டு 50 ரூபாய்க்குதான் வேலை செய்வேன் என்றால் அதை யாராலும் ஏற்க முடியாது. இதெல்லாம் கடந்த ஆட்சியில் நடந்தது. ஆனால் இந்த தவறுகளுக்கு தற்போதைய முதல்வர் ஸ்டாலின் இடம் கொடுக்க மாட்டார் என நம்புகிறேன். முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அதிமுக அரசில் நடந்த ஊழல்கள் குறித்து ஆளுநரிடம் மனு அளித்திருந்தார்.
பிரச்சாரங்கள்
அது போல் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸும் ஆளுநரிடம் மனு அளித்திருந்தார். இரண்டு பேரும் ஆதாரங்களை ஆளுநரிடம் அளித்திருந்தனர். கடந்த ஆட்சியில் யார் ஊழல் செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரங்களின் போது சொல்லியிருந்தார் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications