”டப்பிங்கிற்கு மட்டும் தான் வாய் திறப்பேன் என்று சொன்னால் எப்படி?” விஜய்யை விமர்சித்த கருணாஸ்!
சிவகங்கை: "எதற்குமே வாய் திறக்க மாட்டேன் என்றால் அது என்ன.. டப்பிங்கிற்கு மட்டும் தான் வாய் திறப்பேன் என்று சொன்னால் எப்படி?" என விஜய் குறித்த கேள்விக்கு கருணாஸ் ஆவேசமாக கூறினார். மேலும் ஜனநாயகன் பட சென்சார் விவகாரத்தில் மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமான வரி, சிபிஐ போன்று தற்போது சென்சார் போர்டையும் கையில் வைத்து விஜய்யை அவர்கள் கட்டுப்பாட்டுக்கொண்டு வர முய்ற்சிப்பதாக கருணாஸ் கூறியுள்ளார்.
மாநிலத்தில் உள்ள பலமாக உள்ள கட்சிகளை சூழ்ச்சியின் மூலமாக உடைத்து, அவர்களுக்கு பண ஆசை, அந்த ஆசை, இந்த ஆசை கொடுத்து தூண்டி விட்டு அதன் மூலமாக குளிர் காய்கிறார்கள் என்றும் கருணாஸ் கூறியுள்ளார். சிவகங்கையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கருணாசிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

எதற்குமே வாய் திறக்க மாட்டேன்
விஜய் தொடர்ந்து இருமுறை சிபிஐ விசாரணைக்கு சென்று இருக்கிறார். இதனை பாஜக அழுத்தம் கொடுத்து அவரை கூட்டணிக்கு கொண்டு வரத்தான் இப்படி செய்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த கருணாஸ் கூறியதாவது:- இதனை விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். விஜய் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். எதற்குமே வாய் திறக்க மாட்டேன் என்றால் அது என்ன.. டப்பிங்கிற்கு மட்டும் தான் வாய் திறப்பேன் என்று சொன்னால் எப்படி?" என்று கூறினார்.
ஜனநாயகன் சென்சார் விவகாரம்
தொடர்ந்து ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று வழங்காதது குறித்து பதில் அளித்த கருணாஸ் கூறுகையில், "நான் ஒரு திரைப்பட நடிகரா ஏற்கனவே சொன்னது தான்.. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என எல்லாத் துறைகளையும் மத்திய அரசு கையில் எடுத்து அவர்களுடைய மன்னார் அண்ட் கோ கம்பெனியாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
அந்த மாதிரி சென்சார் போர்டயும் மன்னார் அண்ட் கோவாக மாத்திவிட்டார்கள்.. கேரளாவில் எவ்வளவோ படம் வருகிறது. ஹிந்தியில் எவ்வளவோ படம் வருகிறது. எல்லாம் புராணக் கதை தான்.. எல்லாம் கதை தான்.. எதுவுமே உண்மையில்லை.. எந்த ஆதாரத்தில் இந்த கதையெல்லாம் நாங்க நம்ப வேண்டும் என நினைக்கிறீர்கள்..
எனவே எல்லாம் திட்டமிட்டு செய்வது தான். திட்டமிட்டு ஜனநாயகன் படத்தை முடக்கி, அவர்களது செயல்திட்டத்திற்குள் விஜய்யை கொண்டு வருவதற்கு தான் பாஜக இதுமாதிரி முயற்சி செய்கிறது. இதற்கு ஏற்கனவே நான் கண்டனம தெரிவித்து இருக்கிறேன்" என்றார்.
மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சி
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி முதல் முறையாக மும்பை மாநகராட்சியை கைப்பறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த கருணாஸ், "பிரித்தாழும் சூழ்ச்சி தான் பாஜகவின் செயல்திட்டமே.. ஆர்.எஸ்.எஸ்சின் சித்தாந்தம் என்ன? ஒட்டுமொத்தமாக வெள்ளையர்களிடம் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க நாடு முழுக்க லட்சக்கணக்கானோர் உயிரிழந்தார்கள்.. இதற்காக ஆர்.எஸ்.எஸ் ஒரு நகத்தை கூட கிள்ளி போடவில்லை.
மாநில கட்சிகளை சூழ்ச்சி மூலமாக உடைத்து
இன்னைக்கு இருக்கின்ற ஆர்.எஸ்.எஸோ, பாஜகவோ விடுதலைக்காக என்ன செய்தார்கள்?.. இதே சுபாஷ் சந்திர போஸ் ஐ.என்.ஐ இயக்கத்தை ஆரம்பித்து இந்தியா விடுதலைக்கு பாடுபட்டபோது குறுக்கே புகுந்து கல்டா செய்த கூட்டம் தான் இந்த கூட்டம். இல்லை என்று சொல்ல முடியுமா.. சாவர்க்கர் இந்த நாட்டுக்கு என்ன செய்தார்.. மன்னிப்பு கடிதம் கொடுத்தவர் தானே..
மாநிலத்தில் உள்ள பலமாக உள்ள கட்சிகளை சூழ்ச்சியின் மூலமாக உடைத்து, அவர்களுக்கு பண ஆசை, அந்த ஆசை, இந்த ஆசை என எல்லா ஆசைகளையும் தூண்டி விட்டு அதன் மூலமாக குளிர் காய்கிறார்கள். தமிழ்நாட்டில் நாங்க எல்லாம் மூவேந்தர்களின் ஆட்சியையே பார்த்தவர்கள்.. நாங்க சாதாரண ஆளுங்க கிடையாது. நீங்க என்ன தில்லாலங்கடி வேலை பார்த்தாலும் உங்க செல்ஃப் இங்கே எடுபடாது" என்று கூறினார்.
-
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications