கூவத்தூரில் ஒன்றல்ல, பல ரகசியங்கள் இருக்கிறது.. கருணாஸ் புது குண்டு
காளையார்கோவில்: கூவத்தூரில் ஒரு ரகசியம் இல்லை, பல ரகசியங்கள் உள்ளதை விரைவில் தெரிவிப்பேன் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் வள்ளுவர் கோட்டம் அருகே முக்குலத்தோர் புலிகள் படை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கருணாஸ் முதல்வர் எடப்பாடியை விமர்சனம் செய்து பேசினார்.

மேலும் கூவத்தூரில் தான் இல்லாமல் ஆட்சி அமைத்திருக்குமா என்றும் கேட்டார். மேலும் முதல்வரே தான் எங்கே அடித்துவிடுவேனோ என பயப்படுகிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்தார். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இவரை தினகரன் ஆதரவாளர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காளையார்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில் கூவத்தூரில் ஒரு ரகசியம் இல்லை, பல ரகசியங்கள் உள்ளதை விரைவில் தெரிவிப்பேன்.
தினகரன் அணி மேல்முறையீடு செய்தாலும் சரி, தேர்தலை சந்தித்தாலும் சரி எனக்கு சம்மதம்தான். சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றார் கருணாஸ்.












Click it and Unblock the Notifications