கரூருக்கு வந்த 9 வயது சிறுமி எங்கே? தேடும் உறவுகள்.. உயிரிழந்த 6 குழந்தைகளை நினைத்து கலங்கிய பவன் கல்யாண்
சென்னை: கரூரில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருந்துள்ளனர். இதில் 8 குழந்தைகள், 16 பெண்கள் பலியாகியிருப்பது, நாடு முழுவதும் அதிர்ச்சியை தந்து வருகிறது. மேலும் 62 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடந்து வருகிறது. பல தலைவர்கள் மருத்துவமனைக்கு நோக்கி விரைந்துள்ளனர்.. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் தேவைப்படலாம். ரத்தம் தேவைப்பட நாம் தயாராக இருக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்டத்தில் சிக்கி 6 குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாபமாக பலியாகியிருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.. தற்போது, அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கரூர் மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர்..
வேலுச்சாமிபுரத்தில் பரபரப்பு
கரூரில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களும், மயக்கமுற்ற நபர்களை ஏற்றிச் செல்வதற்காக வேலுச்சாமிபுரத்திற்கு வந்தவண்ணம் உள்ளன.. அதேபோல, திருச்சியில் இருந்து மருத்துவக்குழுவினர் கரூர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
இதனிடையே, விஜய்யின் பிரச்சாரத்தில் பலர் மயக்கமடைந்த நிலையில் 9 வயது சிறுமியை காணவில்லை என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.. கரூரில் விஜய்யை பார்க்க வந்த 9 வயது சிறுமி காணவில்லை என்பதால், பெற்றோர்களும் தவெக தொண்டர்களும் சிறுமியை தேடி வருவதாக கூறப்படுகிறது.
நீதிபதி அருணா ஜெகதீசன்
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கிடவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை தவிர்த்த விஜய்
கரூர் சம்பவத்துக்கு பிறகு, திருச்சியில் செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்துவிட்டு சென்னைக்கு சென்றுவிட்டார் விஜய்.. ஒருவேளை சென்னையில் செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னையிலும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை..
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், "இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்" என்று தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாண்
கரூர் சம்பவத்துக்காக ஜனாதிபதி, பிரதமர் மோடி, ராகுல்காந்தி என பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.. தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது துக்கத்தையும் கண்ணீரையும் இரங்கலாக தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார்.. அதில், "தமிழகத்தில் கரூரில் நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் துரதிருஷ்டவசமானது..
ஆரம்ப கட்ட தகவலின்படி, இந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன்.. இறந்தவர்களில் 6 குழந்தைகளும் அடங்குவர் என்பது மனவேதனை அளிக்கிறது..
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.. காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு தமிழக அரசை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன்
அதேபோல தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.. அதில், "கரூரில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது கவலை அளிக்கிறது. இந்த கடுமையான சூழ்நிலையில் நாம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்போம்.
கரூர் மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டத்தை சார்ந்த சகோதரர்கள் அனைவரும் உடனே மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவியை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாமெல்லாம் ரத்த தானம் செய்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் தேவைப்படலாம். ஆதரவு தேவைப்படலாம்.
சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது என்பது எனது பிரார்த்தனையாக இருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications